மணல்

பாறை மற்றும் தாதுப்பொருட்களின் கலவையால் ஆன குருணைப்பொருள். ஒரு மணற்துகளின் அளவு 0.063 முதல் 2 மிம From Wikipedia, the free encyclopedia

மணல்
Remove ads

மணல் என்பது, உடைந்த பாறைத் துண்டுகளையும் கனிமத் துணிக்கைகளையும் கொண்ட, இயற்கையில் கிடைக்கும் மணியுருவான பொருள் ஆகும். மணல் உருவாகும் இடத்தில் உள்ள பாறை வகைகள், பிற நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்து மணலின் சேர்மானங்கள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனினும், உள்நாடிய கண்டப்பகுதிகளிலும், வெப்பவலயம் அல்லாத கடற்கரைப் பகுதிகளிலும் மணலின் முக்கியமான கூறு சிலிக்கா (சிலிக்கனீரொட்சைடு) ஆகும். பொதுவாக இது குவாட்சு வடிவில் காணப்படுகின்றது.

Thumb
பெருப்பிக்கப்பட்ட வான்கூவர் கடற்கரை மணல்
Thumb
மணல்
Thumb
மணல்

நிலவியலாளர்களின் வரைவிலக்கணப்படி மணல் துணிக்கைகள் 0.0625 மில்லிமீட்டர் (அல்லது 1/16 மி.மீ அல்லது 62.5 மைக்குரோமீட்டர்கள்) தொடக்கம் 2 மில்லிமீட்டர்கள் வரையான விட்டங்களைக் கொண்டது. இதற்கு அடுத்த பெரிய துகள்களைக் கொண்டவை சரளைக் கற்கள் எனப்படுகின்றன. சரளைக் கல்லொன்றின் விட்டம் 2 மி.மீக்கு மேல் 64 மி.மீ வரை இருக்கலாம். நிலவியலில் மணலுக்கு அடுத்துக் குறைவான அளவுள்ள துணிக்கைகளைக் கொண்டது வண்டல் ஆகும். வண்டல் துணிக்கைகளின் அளவு 0.0625 மி.மீக்குக் கீழ் 0.004 மி.மீ வரை என வரையறுக்கப்படுகின்றது. மணற் துணிக்கைகளின் அளவின் மேலெல்லை கடந்த ஒரு நூற்றாண்டாக மாற்றமின்றி இருந்து வருகிறது. ஆனால், அதன் கீழ் எல்லை வெவ்வேறு அளவினதாகக் கொள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆல்பேர்ட் ஆட்டன்பேர்க் சீர்தரம் மணல் துணைக்கை அளவின் கீழெல்லை 0.02 மி.மீ எனக் கொண்டது. அரச நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அலுவலர்களுக்கான அமெரிக்கக் கழகம் 1953 இல் வெளியிட்ட சீர்தரத்தின்படி மணற் துணிக்கையொன்றின் மிகக் குறைந்த அளவு 0.074 ஆகும். ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத் திணைக்களத்தின் விபரப் பட்டியல் மணல் அளவின் கீழெல்லையை 0.05 மி.மீ எனக் குறித்துள்ளது.

Remove ads

இதனையும் காண்க

  • எம் சாண்ட்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads