மணிநகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணிநகர் (Maninagar) என்பது இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் ஒரு பகுதியாகும். நகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி நகரத்தின் முக்கியமான ஓர் இடமாகவும் கருதப்படுகிறது. இப்பகுதி இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது. மணிநகர் கிழக்கு மற்றும் மணிநகர் மேற்கு என்பன அவ்விரு மண்டலங்களாகும். மணிநகர் இரயில் நிலையம் இவ்விரு மண்டலங்களையும் தனித்தனியாகப் பிரிக்கிறது.

விரைவான உண்மைகள் மணிநகர்મણિનગર, நாடு ...
Remove ads

வரலாறு

மணிநகர் உண்மையில் கொழுத்த செல்வந்தரான சேத் மனெக்லால் மணிலாலுக்குச் சொந்தமான ஒரு நிலப் பகுதியாகும். நகரத்தின் சுவர்களுக்கு வெளியே முதலாவதாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குடியிருப்பை உருவாக்குவதற்காக இந்நிலப்பகுதியின் பெரும்பகுதியை மணிலால் நன்கொடையாக வழங்கினார். சர்தார் வல்லபாய் பட்டேல் மணிப்பூரில்தான் முதலாவது திட்டமிட்ட நகரத்தை உருவாக்கினார். தற்போது இப்பகுதி மணிநகர் என்று அழைக்கப்படுகிறது [1][2].

Remove ads

நகரமைப்பு

காங்கரியா ஏரி அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பகுதியான மணிநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மையப்பகுதியில் ஒரு தீவாக நாகினா வாடி அமைந்துள்ளது. அகமதாபாத்-மும்பை வழித்தடத்தில் இயங்கும் ஓர் இரயில் நிலையம் மணிநகர் பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான இரயில்கள் இந்நிலையத்தில் நின்று செல்கின்றன. . அகமதாபாத்-வதோதரா விரைவு வழிச்சாலையின் நுழைவு வாயிலாக மணிகர் நகர் உள்ளது.

கல்வி

செய சோம்நாத் மேல்நிலைப் பள்ளி, செவன்த் டே அட்வண்ட்டிசுட் மேல்நிலைப் பள்ளி, சே.எல். உயர்நிலைப் பள்ளி, ரீயப்சு உயர்நிலை பள்ளி, நெல்சன் உயர்நிலை பள்ளி, சிறீ துர்கா வித்யாலயா உயர்நிலை பள்ளி, குருநானக் & சந்திரகேத்து பாண்டியன் ஆங்கிலவழி நடுநிலைப் பள்ளி, திவான்-பலூபாயி பள்ளி, டூன் சர்வதேசப் பள்ளி, பெசுட்டு உயர்நிலை பள்ளி, சிறீ சர்தார் படேல் மற்றும் சுவாமி விவேகானந்தா உயர்நிலை பள்ளி, துர்கா உயர்நிலை பள்ளி, எப்ரோன் உயர்நிலை பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகள் மணிநகரில் உள்ளன. ஏ.எம்.சி பல்மருத்துவ கல்லூரி, ஏ.எம்.சி மருத்துவக் கல்லூரி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிறுவனம். ஆராய்ச்சி மற்றும் மேலாண்மையியல் கல்லூரி, பி.சே. மருத்துவ கல்லூரி, அகமதாபாத், கே.கே. சாசுத்திரி அரசு கல்லூரி வடிவமைப்பியல் தேசிய நிறுவனம் உள்ளிட கல்லூரிகள் மணிநகரில் கல்விப் பணியாற்றுகின்றன.

போக்குவரத்து

ஓர் இரயில் நிலையம், நகராட்சி பேருந்து போக்குவரத்து நிலையம் மற்றும் மாநில போக்குவரத்து நிலையம் ஆகிய மூன்று வகையான போக்குவரத்து வசதிகளும் அகமதாபாத்திலுள்ள மணிநகரில் ஒருங்கே அமைந்துள்ளது. கொண்டுள்ளது. இவற்றைத் தவிர இப்போது ஒரு விரைவுப் பேருந்து நிலைய மையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மணி நகரில் எல்லா வகையான போக்குவரத்து வசதிகளும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன எனக் கூறலாம். மணிநகரில் அமைந்துள்ள இப்போக்குவரத்து நிலையங்களில் தொடங்கி நகரத்தின் எப்பகுதிக்கும் சென்று வர இயலும். மேலும் தில்லியிலிருந்து மும்பை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எட்டுடனும், விரைவு வழிச்சாலையுடனும் மணிநகர் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

திரையரங்குகள்

காங்கரியா ஏரிக்கு அருகில் "அப்சரா-ஆரதனா" என்று பெயரிடப்பட்ட ஒரு திரையரங்கம். சா ஆலம் அருகில் மீரா திரையங்கம் என இரண்டு பழைய திரையரங்குகள் மணிநகரில் காணப்படுகின்றன. இவ்விரண்டு அரங்குகள் தவிர சமீபத்தில் அனுபம் என்றொரு திரையரங்கும் இங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிட்டி பல்சு என்ற பேரங்காடி ஒன்றும் மணிநகரில் அமைந்துள்ளது.

விளையாட்டுகள்

பல நோக்கு விளையாட்டு அரங்கம் ஒன்று கோக்ரா பகுதியில் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட இவ்விளையாட்டு அரங்கில் கிரிக்கட், கால்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம், கூடைப்பந்து, யூடோ, மற்போர் போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு மாதத்தில் இங்கு குசராத்து மாநில அளவு சதுரங்கப் போட்டி, 200 மீட்டர் ஓட்டம், கபடி, கிரிக்கட் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

குசராத்து அரசு 2011 ஆம் ஆண்டு கேல் மகா கும்ப் என்ற மாபெரும் விளையாட்டுத் திருவிழாவை இங்கு நடத்தியது.

Remove ads

தேர்தல்

மணிநகர் பகுதியை உள்ளடக்கிய சட்ட மன்றத்தொகுதியில் நரேந்திர மோடி 2002-2007, 2007-2012, 2012-2014 தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. [3][4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads