மணியிகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணியிகி (Manihiki) என்பது வளைய வடிவிலுள்ள பவளப்பாறைத் தீவு ஆகும். பொதுமக்கள் இத்தீவினை, முத்துக்கள் தீவு என்றும் அழைப்பர். இத்தீவு குக் தீவின் வடப்பக்கம் அமைந்துள்ளது. தலைமைத்தீவான இர்ரோடோன்காவிலிருந்து வடக்குப் பகுதியில் ஏறத்தாழ 1,299 கிலோமீட்டர்கள் (807 mi) தொலைவில் அமைந்துள்ளது. அமைதிப் பெருங்கடல் பகுதியிலிருக்கும் மக்கள் வாழா தொலைவான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் இங்குள்ள தாவர வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாலினேசிய மக்கள் இத்தீவில், கி. பி. 900 அல்லது 1000 காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
