மணிவாசகர் பதிப்பகம்

தமிழ்நாட்டில் உள்ள பதிப்பகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணிவாசகர் பதிப்பகம், சென்னையில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று. இப்பதிப்பகம் மொழிக் கொள்கை, வெளியீட்டுக் கொள்கை, விலைக்கொள்கை என்கிற மூன்றின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இப்பதிப்பகத்தைப் முனைவர் ச. மெய்யப்பன் என்பவர் நிறுவினார். இப்பதிப்பகம் வெளியிட்டுள்ள பல நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

சிறப்புகள்

மணிவாசகர் பதிப்பகத்தின் சிறப்புகளாகக் கீழ்க்காணும் தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. [1]

  • மணிவாசகர் பதிப்பகம் இதுவரை 2500 நூல்களை வெளியிட்டிருக்கிறது. இதில் 300 நூல்கள் அரிய ஆய்வு நூல்களாகும். இப்பதிப்பகத்தின் 75 நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. 75 நூல்கள் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.
  • துணைவேந்தர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற பலர் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களின் ஆசிரியர்கள்.
  • 300க்கும் அதிகமான புதிய நூலாசிரியர்களை இப்பதிப்பகம் அறிமுகம் செய்துள்ளது.
  • இப்பதிப்பகத்தின் பெருந்திட்டத்தில் நகரத்தார் கலைக்களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக்களஞ்சியம், சங்க இலக்கியத் தொன்மக் கலைக்களஞ்சியம் போன்றவைகளை வெளியிட்டுள்ளன.
  • ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் நூல்களை வெளியிட்டு வருகிறது.
  • இப்பதிப்பகம் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads