மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

தமிழக குடைவரைக் கோயில் From Wikipedia, the free encyclopedia

மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்map
Remove ads

மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் அல்லது மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் என்பது தமிழ் நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள குடவரைக் கோயிலாகும்.

Thumb
7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியேச் சேர்ந்த மண்டகப்பட்டு கோவில் பிரம்மன்-சிவன்-விட்டுணுவிற்கு அருப்பணிக்கப்பட்டது.

அமைவிடம்

இக்கோயிலானது விழுப்புரத்திலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்குள்ள முதன்மைச் சாலையில் இருந்து குடவரைக் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை என்பதால் ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்லவேண்டும்.

வரலாறு

இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் இந்தக் குடைவரை கோயில். கி.பி. 590 முதல் கி.பி. 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். வட தமிழ் நாட்டின் முதல் குடைவரைக் கோயில் மற்றும் தமிழ்நாட்டு குடைவரைகளில் ஆண்டு குறிப்பிடப்பட்ட பழமையான கற்கோயில்[1][2] என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.

இக்கோயிலில் பிரம்மன், விட்டுணு, சிவன் ஆகியோருக்கு மூன்று தனித்தனி சன்னதிகள் அமைக்கபட்டுள்ளன. ஆனால் தற்போது திருமேனிகள் ஏதும் இல்லை. குடைவரையின் வாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன.

Thumb
கோவிலின் இடதுபுறம் அமைந்துள்ள துவாரபாலகர் சிலை

இக்குடைவரையில் காணப்பட்ட முதலாம் மகேந்திரவர்மனின்[3] வடமொழிக் கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டு வாசகம்:

EtadanishTamadrumamalOhamasudham vichitra chitEna nirmA pitanrupENabrahmEsharaviShNulakSitAyanam

தேவநகரி எழுத்து வடிவத்தில் மொழிபெயர்க்கபட்ட கல்வெட்டு:

अतद्निष्टकंद्रुं(मलो)-
हमसुधं (विचित्रचि)त्तेन
निम्मर्पितन्न्रपे(ण) ब्रह्मो –
श्वरविष्णुल(क्षि)तायनं

தமிழ் மொழிபெயர்ப்பு:

"பிரம்மன், சிவன், விட்டுணு ஆகியோருக்கு அருப்பணிக்கப்பட்ட கோயில் இரும்பு, மரம், செங்கல், சுதை போன்றவற்றை பயன்படுத்தாமல் விசித்திரச்சித்தனால் குடையப்பட்டது".


Remove ads

இவற்றையும் பார்க்கவும்

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads