மண்டா

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

மண்டா
Remove ads

மண்டா (Manda), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரிக கால தொல்லியல் மேடு அமைந்த கிராமம் ஆகும்.

விரைவான உண்மைகள் மண்டா मांदा, இருப்பிடம் ...
Thumb
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1976-77 ஆண்டுகளில் மன்டா கிராமத்தின் தொல்லியல் மேட்டை அகழாாய்வு செய்த போது சிந்துவெளி நாகரீகக் கால தொல்பொருட்கள் கிடைத்தது.[4]

Remove ads

அகழ்வாய்வு

மண்டா தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்த போது, மூன்று கால கட்ட நாகரீகங்களின் தொல்பொருட்கள் கிடைத்தது.[5] குசான் பேரரசிற்குப் பின்னர் இத்தொல்லியல் களம் சிதிலமடைந்ததது.[4]

வரலாற்று முக்கியத்துவம்

பிர் பாஞ்சல் மலைத்தொடரின் அடிவாரத்தில் பாயும் செனாப் ஆற்றின் கரையில் அமைந்த மாண்டா கிராமம், ஜம்மு நகரத்திற்கு வடமேற்கே 28 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்டா கிராமத்தின் அகழ்வாய்வு மூலம் கிடைத்த தொல்லியல் எச்சங்களைக் கொண்டு இக்கிராமம் சிந்துவெளி நாகரீகத்தின் வடக்கில் அமைந்த பகுதி என அறிய முடிகிறது.[1][3][6][7][8][9]

தொல்பொருட்கள்

மண்டா தொல்லியல் களத்தில் கிடைத்த முந்தைய அரப்பா நாகரிகக் காலத்திய தொல்பொருட்களில் குடுவைகள், தட்டுகள், கோப்பைகள், சுடுமண் வளையல்கள், படிவுப் பாறை ஆயுதங்கள், செப்புப் பாத்திரங்கள் உள்ளிட்ட சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.[4] இங்கு முதிர்ந்த அரப்பா காலத்திய சிந்துவெளி எழுத்துக்கள் கூடிய மட்பாண்டங்கள் மற்றும் முடிவுறாத முத்திரை ஒன்று கிடைத்துள்ளது.[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads