மண்டையோடு

From Wikipedia, the free encyclopedia

மண்டையோடு
Remove ads

மண்டையோடு (Cranium) என்பது மூளையை மூடிக் காணப்படும் தலையோட்டின் ஒரு பகுதியாகும். மண்டையோடானது தாடையெலும்பையும் உள்ளடக்கிய முகவெலும்புகளுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும்[1][2]. மண்டையோடானது தலையோட்டின் மேற்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அமைந்திருக்கும்.

Thumb

மனித மண்டையோடு

மனித மண்டையோடானது எட்டு தட்டையான எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகள் அசைவுகள் குறைந்த தையல்மூட்டுக்களால் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். மண்டையோட்டின் பின்பக்கமானது முன் பக்கத்தைவிட அகலமானதாக இருக்கும்.

மண்டையோட்டு எலும்புகளாவன:

Remove ads

குழந்தையின் மண்டையோடு

குழந்தையின் தலையானது, ஒப்பீட்டளவில், உடலைவிடப் பெரிதாக இருப்பதை அவதானிக்க முடியும். அனேகமாக குழந்தை பிறக்கும்போது மண்டையோடானது தனது மொத்த உருவ அளவைப் பெற்றிருக்கும். ஆனாலும் குழந்தையின் மண்டையோட்டுக்கும், வளர்ந்த மனிதனின் மண்டையோட்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. குழந்தையின் மண்டையோட்டில் பின்பக்கமும், முன்பக்கமுமாக சிறிய துவார வடிவில் எலும்பாக்கம் நிகழாத இரு பகுதிகள் இருக்கும். இவை உச்சிக்குழிகள் (fontenelle) என அழைக்கப்படும். இவற்றில் பின்பக்க குழியானது 6 கிழமிகளில் மூடப்படும். பின்பக்கக் குழியானது கிட்டத்தட்ட 18 மாதங்கள்வரை மூடப்படாத நிலையில் காணப்படும். குழந்தை பிறப்பு இலகுவாக இருப்பதற்காகவும், வளர்ந்து வரும் மூளைக்கு இடமளிப்பதற்காகவும் குழந்தையின் மண்டையோடு இறுக்கமாகப் பிணைக்கப்படாமல், ஓரளவு நெகிழ்வான, அசையும் தன்மையுடன் காணப்படும். மூளை விருத்தி நிறைவு பெற்ற பின்னரே, கிட்டத்தட்ட 24 மாதங்களின் பின்னர், குழந்தையின் மண்டையோடானது முற்றாக இறுக்கமடைந்து, மூட்டுக்கள் அசைவற்ற நிலைக்கு வரும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads