மண்மங்கலம் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மண்மங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆறாவது வருவாய் வட்டம் ஆகும்.[1] இவ்வட்டம் கரூர் வட்டத்தின் வடக்கில் உள்ள சில பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 நிறுவப்பட்டது.[2] மண்மங்கலம் வட்டம் 326 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மண்மங்கலம் வட்டத்தின் மக்கள்தொகை 1.65 இலட்சம் ஆகும். [3]

நிர்வாகம்

இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மண்மங்கலத்தில் செயல்படுகிறது. மண்மங்கலம் வட்டம் வாங்கல், மண்மங்கலம் மற்றும் தாளப்பட்டி என 3 உள்வட்டங்கள் எனும் பிர்காக்களும், 21 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4]

மண்மங்கல வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வாங்கல் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. நஞ்செய் கடம்பங்குறிச்சி
  2. புஞ்செய் கடம்பங்குறிச்சி
  3. நன்னியூர்
  4. வாங்கல்
  5. குப்புச்சிப்பாளையம்

மண்மங்கலம் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. மண்மங்கலம்
  2. ஆத்தூர்
  3. காதப்பாறை
  4. மின்னாம்பள்ளி
  5. நெரூர் (வடபாகம்)
  6. நெரூர் (தென்பாகம்)
  7. அச்சமாபுரம்
  8. சோமூர்
  9. கோயம்பள்ளி
  10. பஞ்சமாதேவி

தாளப்பட்டி துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. ஆண்டாங்கோயில் (கிழக்கு)
  2. ஆண்டாங்கோயில் (மேற்கு)
  3. கருப்பம்பாளையம்
  4. அப்பிப்பாளையம்
  5. பள்ளபாளையம்
  6. தாளப்பட்டி
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads