மதுரைக் கலம்பகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுரைக் கலம்பகம் தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான கலம்பக வரிசையில் குமரகுருபரால் பாடப்பெற்ற நூலாகம். மதுரையினது கலம்பகம் என்று விரிந்து நின்று

 பொருள்தருவதாக மதுரைக் கலம்பகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கலம்பகம் என்பது பல வகை மலர்களால் இணைக்கப் பெற்ற மாலை போன்று பல வேறுபட்ட பாக்களாலும், பாவகைகளாலும் அமைந்திருக்கும்.

மதுரை தோன்றிய வரலாறு

குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் காட்டை அழித்து நகரத்தை உருவாக்க முனைந்த பூசனை செய்தபோது, சிவபெருமான் தன் சடைமுடிவில் வீற்றிருக்கும் சந்திரனில் இருந்து அமுதத்தைப் பெருகச்செய்து பெய்விக்க அவ்வமுதமானது நகர் முழுதும் பரவி மதுரமயமாகியது. மதுரை என்னும் பெயரையும் பெற்றது என்று மதுரை நகரம் தோன்றிய விதம் குறித்து இந்நூல் எடுத்தியம்புகிறது.

நூல் அமைப்பு

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று இரண்டு பாடல்களை கொண்டதாகும். ஆசிரியர் சிறப்புப்பாயிரம் எனும் பாடலையும் உள்ளடக்கியது. மதுரை மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெருமைகளை இந்நூல் விளக்கம்தருகிறது. [1]

மேலும் காண்க


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads