மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் மதுரையிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும் (9 தன்னாட்சி) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியைப் பெற்றுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (மதுரைப் பல்கலைக் கழகம் ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசனின் தலைநகரில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1978-இல் முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சரும் 1975-இல் மறைந்தவருமான காமராசர் நினைவாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
Remove ads
துணைவேந்தர்கள்
- முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (01.02.1966 - 18.01.1971)[3]
- முனைவர் மு. வரதராசன் (01.02.1971 - 10.10.1974)
- முனைவர் எசு. வி. சிட்டிபாபு (24.02.1975 - 23.02.1978)
- முனைவர் வா.செ.குழந்தைசாமி (31.03.1978 - 02.03.1979)[4]
- முனைவர் வ.சுப.மாணிக்கம் (17.08.1979 - 30.06.1982)[5]
- பேராசிரியர் ஜெ. இராமசந்திரன் (29.08.1982 - 28.08.1985)
- பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி[6] (04.10.1985 - 20.11.1988)
- முனைவர் எம்.இலட்சுமணன் (20.01.1989 - 19.01.1992)[7]
- முனைவர் எம்.டி.கே.குத்தாலிங்கம்[8] (20.01.1992 - 19.01.1995)
- பேராசிரியர் கு. ஆளுடையபிள்ளை, இ.ஆ.ப. (19.05.1995 - 18.05.1998)[8]
- பேராசிரியர் எம். சாலிகு (24.07.1998 - 23.07.2001)[8]
- முனைவர் பி.கே.பொன்னுசாமி (01.02.2002 - 31.01.2005)[8]
- முனைவர் பி. மருதமுத்து(07.03.2005 - 06.03.2008)[8]
- முனைவர் இரா.கற்பககுமரவேல் (20.4.2008 - 19.4. 2011)[9]
- முனைவர் கல்யாணி மதிவாணன் (10.4.2012 -18.04.2015)[8]
- பேராசிரியர் பி.பி. செல்லத்துரை (28.05.2017 -14.06.2018)[10]
- பேராசிரியர் மு. கிருஷ்ணன் (02.01.2019 முதல்)[11]
- பேராசிரியர் ஜெ. குமார்
Remove ads
வழங்கப்படும் படிப்புகள்
முதுநிலை படிப்புகள்
- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை வரலாறு
- முதுநிலை அறிவியல் (கணிதம்)
- முதுநிலை அறிவியல் (இயற்பியல்)
- முதுநிலை அறிவியல் (உயிர்-வேதியியல்)
- முதுநிலை அறிவியல் (மூலக்கூறு உயிரியல்)
இளநிலை ஆய்வாளர்
- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
முதுநிலை ஆய்வாளர்
- தமிழ்
- ஆங்கிலம்
- பயிரியல்
- விலங்கியல்
- உயிர்-வேதியியல்
- மூலக்கூறு உயிரியல்
இதன் திறந்த பாடக் கற்கைநெறிகளை இலங்கையில் கொழும்பில் அம்பிகா கல்வி நிலையமூடாக செப்டம்பர் 6 2000 முதல் வெளிவாரிக் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றனர். சில நிலையங்களில் ஆய்வுகளையும் ஆசிரியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads