மதுரை மாநகராட்சி

இது தமிழக 21 மாநகராட்சிகளுள் நான்காவது பெரிய மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

மதுரை மாநகராட்சி
Remove ads

மதுரை மாநகராட்சி என்பது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது பெரிய மாநகரம் ஆகும். இது மொத்தம் நூறு (100) வார்டுகளைக் கொண்டுள்ளது. சுமார் 147 சதுர கி.மீ கொண்ட இந்த மாநகராட்சி தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது பெரிய மாநகராட்சியும் ஆகும். இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளைப் போல சில நகராட்சிகளை உள்ளடக்கி உள்ளது. அவை ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் நகராட்சிகள் ஆகும். இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய என மொத்தம் ஐந்து மண்டலங்களைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி ஆண்டு வரி வருவாயில் 586 கோடி ரூபாய் வரி வசூல் செய்கிறது.இது தமிழக வரி வசூல் வருவாயில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

விரைவான உண்மைகள் மதுரை மாநகராட்சி, வகை ...

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான மதுரையை, 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.

Remove ads

மதுரை மாநகராட்சி வரலாறு

  • 1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.
  • 1882: நகராட்சியில் புதிதாக ஆணையாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது ஆணையாளர் அதே ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி பதவியேற்றார்.
  • 1885: ஆணையாளர் பதவி நகர்மன்ற உறுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல நகர்மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆணையாளர்களின் தலைவர் பதவி நகர்மன்றத் தலைவர் என்று மாற்றப்பட்டது. முதலாவது நகர்மன்றத் தலைவராக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.
  • 1892: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.
  • 1921: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.
  • 1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சிக் குழு (நகர் மன்றம்) கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி ஆட்சியாளர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • 1933: மீண்டும் அதே நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்பட அரசு அனுமதித்தது.
  • 1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக நகராட்சிக் குழு (மன்றம்) மீண்டும் கலைக்கப்பட்டது.
  • 1943: நகராட்சிக் குழு (மன்றம்) முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • 1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக நகராட்சிக் குழு (நகர் மன்றம்)வுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்படத் துவங்கியது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.
  • 1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
  • 1971: மதுரை நகராட்சியானது மாநகராட்சியாக 1 மே 1971 அன்று உயர்த்தப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மாமன்றத் தலைவராக (மேயர்) எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். பி.ஆனந்தம் மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.
  • 1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
  • 1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.
  • 1996: மதுரை மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக ப.குழந்தைவேலு (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) மிசா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2001: மதுரை மாநகராட்சிக்கு மூன்றாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006: மதுரை மாநகராட்சிக்கு நான்காவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக தேன்மொழி கோபிநாதன் (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) பி.எம்.மன்னன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2011: மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள்,11 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100ஆக மாற்றம் செய்யப்பட்டன.
  • 2011: மதுரை மாநகராட்சிக்கு ஐந்தாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக திரு.வி. வி. ராஜன் செல்லப்பா (அ.தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) எஸ். கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
Remove ads

மேயர்கள்

துணை மேயர்கள்

  • எஸ். நவநீதகிருஷ்ணன் (1980–1982)
  • மிசா. எம். பாண்டியன் (1996–2001)
  • டி. சின்னச்சாமி (2001–2005)
  • எஸ். கௌஸ்பாட்சா (2005–2006)
  • பி. எம். மன்னன் (2006–2011)
  • ஆர். கோபாலகிருஷ்ணன் (2011–2014)
  • எம். திரவியம் (2014 - )
  • டி. நாகராஜன், சிபிஎம் (2022 -)

ஆணையர்

  • எஸ்.தினேஷ்குமார் (பிப்ரவரி 2024)

மதுரை நகராட்சியின் சில முன்னாள் தலைவர்கள்

மாநகராட்சி அமைப்பு

மதுரை மாநகராட்சி இரண்டு மாவட்டப் பிரிவுகளாக செயல்படுகின்றது. ஒன்று தீர்மானித்து ஆய்ந்து செயல் படுகின்ற பிரிவு (ஆய்வுக் குழு) இன்னொன்று செயலாட்சி புரிகின்ற பிரிவு என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகின்றன. செயலாட்சியர் பிரிவில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.

மேலதிகத் தகவல்கள் பரப்பளவு, மக்கள் தொகை ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads