பெரியார் பேருந்து நிலையம், மதுரை

From Wikipedia, the free encyclopedia

பெரியார் பேருந்து நிலையம், மதுரை
Remove ads

பெரியார் பேருந்து நிலையம் (Periyar Bus Stand) என்பது மதுரை மாநகராட்சியில் மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் முதலில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், நகர் விரிவாக்கத்தால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு, மாட்டுத்தாவணிப் பகுதியில் புதிதாக மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்பு நகரப் பேருந்து நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியினுள்ளிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான்,வாடிப்பட்டி, அழகர் கோவில், மேலூர், காரியாபட்டி, நத்தம், ஊர்மெச்சிகுளம், குலமங்கலம், சக்கிமங்கலம், பூவந்தி, வரிச்சியூர் போன்ற ஊர்களின் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Thumb
தற்போதைய பெரியார் பேருந்து நிலையம் முகப்புத் தோற்றம்
Remove ads

வரலாறு

Thumb
மதுரை மத்திய பேருந்து நிலையத்தின் பழைய புகைப்படம் (இன்றைய பெரியார் பேருந்து நிலையம்)

முன்பிருந்த பெரியார் பேருந்து நிலையம் 1970-களில் தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு மீண்டும் நவீன வடிவில் கட்டமைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையப் பணிகள் 2019 ஆம் ஆண்டு சனவரி 17ஆம் நாள் தொடங்கின. இந்தப் பேருந்து நிலையக் கட்டுமானத்திற்கான அனுமதிக்கப்பட்ட செலவினம் ரூபாய். 153 கோடி ஆகும்.[1]

Remove ads

வசதிகள்

புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையமானது அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையம் சீர்மிகு நகரங்களின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.[2]

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads