மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute, CLRI) என்பது இந்திய அரசினால் தோல் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்டது. உலகளவில் தோல் ஆராய்ச்சி தொடர்பான அதிக உரிமங்களையும் ஆய்வுத்தாள்களையும் கொண்டுள்ளது.[1][2] அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழுவின் கீழ் 1948 ஆம் ஆண்டு, 24 ஏப்பிரல் அன்று நிறுவப்பட்டது.[3]

செயற்பாடுகள்
தோல் தொழிற்சாலையின் வளர்ச்சியே இதன் முதன்மை நோக்கு. புதுமையான தோல் பதனிடும் தொழில் முறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது.[4] தோல் பதனிடுதல் தொடர்பான பயிற்சிகளும் தொழினுட்ப உதவிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
இந்நிறுவனம் வேதியியல், உயிரியல், பொறியியல், தகவல் தொழினுட்பவியல் போன்ற பிரிவுகளையும் கொண்டுள்ளது. தலைமையகம் சென்னையிலும், மண்டல ஆய்வகங்கள் அகமதாபாத், ஜலந்தர், கான்பூர், கொல்கத்தாவிலும் உள்ளன.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads