மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
Remove ads

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும். இது 1948, சூலை 25-ல் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் நிறுவப்பட்டு, 1953 சனவரி 14 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாய்வு மையம் அமையவதற்கு டாக்டர். அழகப்பச் செட்டியார் அவர்கள் 300 ஏக்கர் நிலத்தையும், 15 இலட்ச ரூபாய் பணத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். இம்மையம் கடந்த 50 வருடங்களில் மின் வேதியியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியாவிலும் முதன்மையான ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது.[1] மொத்தமாக 755 காப்புரிமைகள் இவ்வாராய்ச்சி மையத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, உருவாக்கம் ...
Remove ads

பிராந்திய மையங்கள்

  1. மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி மையம், சென்னை அலகு, சென்னை தரமணி[2]
  2. துரு ஆராய்ச்சி மையம், மண்டபம் முகாம், இராமநாதபுரம்.
  3. தூத்துக்குடி மையம், தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads