மத்ரியோஷ்கா பொம்மை

From Wikipedia, the free encyclopedia

மத்ரியோஷ்கா பொம்மை
Remove ads

மத்ரியோஷ்கா பொம்மை (matryoshka doll; உருசியம்: матрёшка, பஒஅ: [mɐˈtrʲɵʂkə]( கேட்க)), மேலும் உருசிய கூடு பொம்மை அல்லது உருசிய பொம்மை,[1] என்பது மரத்தால் செய்யப்பட்ட மர பொம்மைகள் தொகுப்பு ஆகும். இவை ஒன்றினுள் ஒன்று வைப்பதுபோல சிறியது அதைவிட சிறியது என்ற அளவோடு இருக்கும். மத்ரியோஷ்கா என்றால். அன்னை என்று பொருள் வரும் லத்தீன் சொல்லான மேட்ரனிலிருந்து திரிந்து இந்தப் பெயர் வந்துள்ளது.[2]

Thumb
மத்ரியோஷ்கா பொம்மை தொகுப்பு
Thumb
திறந்த நிலையில் மத்ரியோஷ்கா கூடு

ஒரு தொகுப்பு மத்ரியோஷ்கா பொம்மையைத் திறந்தால் இன்னொரு பொம்மை. அந்தப் பொம்மையைத் திறந்தால் இன்னொரு குட்டி பொம்மை என ஆறு பொம்மைகளைத் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் ஏழாவது பெரிய பொம்மையே மத்ரியோஷ்கா.

உருசியாவின் நாட்டுப்பற கைவினைஞர்களான வசீலிவிச் பெட்ரோவிச் ஜ்வெஸ்டோக்கின், சவ்வ அய்வனோவிச் மமோன்தவ் என்ற இருவரும் சேர்ந்து 1890 இல் வடிவமைத்த பொம்மைத் தொகுப்பு இது. குண்டான இளம் கிராமத்து உருசியப் பெண்ணின் சாயலில் முதல் பொம்மையை உருவாக்கினார்கள். பின்னர் வெளி பொம்மையான மத்ரியோஷ்காவுக்குப் பாரம்பரிய உருசிய உடையான சராஃபனை அணிந்ததுபோல வடிவமைத்து அழகூட்டினர். அம்மாவே குடும்பத் தலைவராக இருந்த உருசியக் குடும்ப முறையைக் குறிப்பதாக பெரிய பொம்மை அமைந்துள்ளது. அதற்குள் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சிறிய மர பொம்மைகளாக உள்ளன. மத்ரியோஷ்கா பொம்மைகளாக விசித்திரக் கதைப் பாதிரங்களில் இருந்து சோவியத் தலைவர்களின் உருவத்தில்கூட பொம்மைகள் கிடைக்கின்றன.

Remove ads

வரலாறு

Thumb
1892 ஆம் ஆண்டு ஜியோஸோடோட்கின் மற்றும் மாலூதின் ஆகியோரால் உருவாக்கப்பட பொம்மைகள்

முதன் முதலில் இந்த பொம்மைகளை வஸீலிவிச் பெட்ரோவிச் ஜ்வெஸ்டோக்கின், சவ்வ அய்வனோவிச் மமோன்தவ் ஆகிய இரு நாட்டுப்புற கைவினைஞர்கள் சேர்ந்து 1890 வடிவமைத்தனர் .[3][4] இந்த மொம்மைக்குள் ஒன்றினுள் ஒன்றாக பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சிறிய மர பொம்மைகளாக உருவாக்கப்பட்டன. வெளி பொம்மையான மத்ரியோஷ்காவுக்குப் பாரம்பரிய உருசிய உடையான சராஃபனை அணிந்ததுபோல வடிவமைத்தனர். அதற்குள் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சிறிய மர பொம்மைகளாக உள்ளதாக வடிவமைக்கப்பட்டன.

1900 ஆம் ஆண்டில் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில்தான் காட்சிப்படுத்தப்பட்ட மத்ரியோஷ்கா பொம்மைகள் உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றது. வெவ்வேறு நாடுகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கவர்ந்த கதைகளின் தாக்கத்தில் மத்ரியோஷ்கா பொம்மைகளை உருவாக்க ஆரம்பித்தனர்.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads