மந்தபாலர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குழந்தை பேறு இல்லாத மந்தபாலர் எனும் முனிவர், தன் மனைவியான ஜரிதையுடன் சாரங்கப் பறவைகள் போன்று உருமாறி காண்டவ வனத்தில் தங்கி 4 குழந்தைகளைப் பெற்றனர்.இந்நிலையில் மந்தபாலர் தன் மனைவி ஜரிதை மற்றும் 4 குழந்தைகளை விட்டு விட்டு, வனத்தில் ஒரு புறத்தில் லபிதை எனும் சாரங்கப் பறவையுடன் உலாவிக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணனின் ஆலோசனையின் போரில் புதிய இந்திரப்பிரஸ்தம் நகரம் அமைக்க அருச்சுனன் காண்டவ வனத்தை 15 நாட்களாக எரிக்க முற்பட்டார். அவ்வமயம் மந்தபாலர் அக்னி தேவனிடம் காண்டவ வனம் எரியும் போது, தன் குடும்பத்தாரை தப்பவிடுமாறு பணிந்து கேட்டுக்கொண்டார்.

காண்டவ வனம் எரியும் போது மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் எரிந்து சாம்பாலானது. இக்காட்டுத் தீயில் மந்தபாலரின் கடும்பத்தினர், தட்சகன் மகன் அஸ்வசேனன் மற்றும் மயன் ஆகியவர் மற்றும் சாரங்கப் பறவைகள் மட்டும் உயிர் பிழைத்தனர்.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads