மந்தி

From Wikipedia, the free encyclopedia

மந்தி
Remove ads

மந்தி (Mandi; அரபு மொழிஃ منڈي) என்பது அத்ரமௌத் பிராந்தியத்தில் தோன்றிய ஒரு பாரம்பரிய உணவாகும்.[2] இது முக்கியமாக இறைச்சியினை அரிசி, மசாலா பொருட்களின் கலவையுடன் சேர்த்துச் சமைக்கப்படும் உணவாகும். மேலும் இந்த உணவானது ஒரு குழி அடுப்பில் சமைக்கப்படுகிறது. இது அரேபியத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் உட்கொள்ளப்படுகிறது. மேலும் எகிப்து, ஐதராபாத்து (லெவண்ட், துருக்கி, கேரளா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் யேமன் வம்சாவளியைச் சேர்ந்த பலர் வசிக்கின்றனர்) ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது.

Thumb
ஆட்டிறைச்சி மந்தி
Thumb
கேரளா மந்தி-குழி மந்தி
Thumb
கோழி மந்தி
விரைவான உண்மைகள் பரிமாறப்படும் வெப்பநிலை, பகுதி ...
Thumb
கயிற்றில் கோழி தொங்கவிடப்பட்டு அதன் கீழ் உள்ள நீராவி, வெப்பத்திலிருந்து சமைக்கப்படுகிறது.
Thumb
மந்தியைச் சமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழி அடுப்பு, தந்தூர்
Remove ads

சொற்பிறப்பியல்

"மந்தி" என்ற சொல் "பனிக்கட்டி" என்று பொருள்படும் அரபு வார்த்தையான "nada" என்பதிலிருந்து வந்தது. மேலும் இது இறைச்சியின் ஈரமான "டுவி" அமைப்பைப் பிரதிபலிக்கிறது.[3]

நுட்பம்

மந்தி பொதுவாக அரிசி, இறைச்சி (ஆடு, ஒட்டகம், ஆட்டுக்குட்டி அல்லது கோழி) மற்றும் ஹவாய் எனப்படும் மசாலா பொருட்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்டது. மற்ற இறைச்சி உணவுகளிலிருந்து மந்தியை வேறுபடுத்தும் முக்கிய நுட்பம் என்னவென்றால், இறைச்சி சிறப்பு அடுப்பில் சமைக்கப்படுகிறது.

உலர்ந்த மரம் (பாரம்பரியமாக சாமர் அல்லது கதா) தந்தூரில் வைக்கப்பட்டு வெப்பத்தை உருவாக்க எரிக்கப்படுகிறது. இதனால் மரம் கரி ஆகிறது.

பின்னர் இறைச்சி முழு மசாலா பொருட்களுடன் மென்மையாகும் வரை கொதிக்க வைத்துச் சமைக்கப்படுகிறது. பின்னர் தந்தூரின் அடிப்பகுதியில் பாசுமதி அரிசியைச் சமைக்கப் பயன்படுத்தப்படுகின்றனர். இறைச்சி அரிசிக்கு மேலே உள்ள தந்தூருக்குள், கரியினைத் தொடாமல் தொங்கவிடப்படுகிறது. இதன்பிறகு, முழு தந்தூர் எட்டு மணி நேரம் வரை களிமண்ணால் மூடப்படுகிறது.

Remove ads

பிராந்திய வேறுபாடுகள்

மந்தி தன் ஏமன் தோற்றத்தினைக் கடந்து இப்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட அரேபிய தீபகற்பத்தின் பல பகுதிகளில் பிரபலமாக உள்ளது. இது லெவண்ட், துருக்கி, தெற்காசியா பகுதிகளிலும் உண்ணப்படுகிறது. இங்கு இந்தியாவின் கேரளாவில் "குழுமந்தி" என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியமும் பெரும்பாலும் உள்ளூர் மசாலா பொருட்கள், சமையல் முறைகளை உள்ளடக்கியது. இது உணவின் தனித்துவத்திற்கு வழிவகுக்கிறது.

ஏமனில், மந்தி பாரம்பரியமாகப் பெரிய தட்டுகளில் பரிமாறப்படுகிறது. மேலும் பெரும்பாலும் யேமனில் ஜஹாவிக் அல்லது சவுதி அரேபியாவில் தகோசு என்று அழைக்கப்படும் ஒரு புளிப்பு தக்காளி சாற்றுடன் வழங்கப்படுகிறது. இது உணவின் சுவையினை மேம்படுத்துகிறது. இறைச்சி, அரிசியின் சுவைகளுக்கு மாறுபாட்டை வழங்குவதன் மூலம், ஒரு புதிய பச்சைக்காய்கறிக் கலவையுடன் பொதுவாக மந்தியுடன் பரிமாறப்படுகிறது. [4][5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads