மந்திரன்
2005 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மந்திரன் (Manthiran) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் - நாடகத் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் அம்சவர்தன், சுருதி ஆகியோர் நடித்தனர். இப்படமானது பொன் நவராசுவின் கதையை அடிப்படையாகக் கொண்டது.[1]
Remove ads
நடிகர்கள்
- அம்சவர்தன் அம்சாவாக
- சுருதி அபியாக
- ராசன் பி. தேவ் உள்ளூர் சண்டியராக
- சுகுமார்
- டெல்லி கணேஷ் வீட்டு உரிமையாளராக
- ரவிச்சந்திரன் சிறப்புத் தோற்றத்தில்
- அபிநயஸ்ரீ சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
ரவிச்சந்திரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் அவரது மகன் அம்சவர்தன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார், அம்சவர்தனின் சகோதரரான பாலாஜி இப்படத்தை இணைந்து தயாரித்தார். ராகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அபிநயஸ்ரீ ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடினார். பாடல்களுக்கு ஸ்ரீதர் மற்றும் கே.சிவசங்கர் ஆகியோர் நடன அசைவுகளை அமைத்தனர்.[2]
வெளியீடு
சிஃபி எழுதிய விமர்சனத்தில், "படத்தில் திருப்பம் ஏதும் இல்லை, மந்திரன் சமீபத்திய மழையைப் போலவே சோர்வாக இருக்கிறது" என்றது.[3] படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads