அபிநயசிறீ

நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

அபிநயஸ்ரீ (Abhinayashree) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தென்னிந்திய மொழி படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் அபிநயசிறீ, பிறப்பு ...

தொழில்

இவரது முதல் பெரிய பாத்திரம் சித்திக்கின் 2001 தமிழ் நகைச்சுவை படமான பிரண்ட்ஸ் படத்தில் வந்தது. அதில் விஜய் மற்றும் சூரியாவுடன் நடித்தார். 2004 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான ஆர்யாவில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து "ஆ அண்டே அமலாபுரம்" பாடலுக்கு ஆடியபிறகு இவர் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைப் பெற்றார். இந்த வெற்றி இந்த நடிகைக்கு இதே போன்ற பல வாய்ப்புகளைப் பெற வழிவகுத்தது.[1] 2005 ஆம் ஆண்டு தெலுங்கு நகைச்சுவை படமான ஹங்காமாவில் அலி மற்றும் வேணு மாதவ் ஆகியோருடன் இவர் நடித்தார். இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி இந்த பாத்திரத்தை இவருக்கு விளக்கியப் பின்னர் முப்பது நாட்கள் படப்பிடிப்புக்கு ஒப்புதல் தந்து கையெழுத்திட்டார். இவர் பைசலோ பரமாத்மா என்ற படத்தில் நடித்ததற்காக ஆந்திர அரசின் சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருதை வென்றார்.

2007 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான ஆதிவரம் ஆடவல்லக்கு செலவு படத்தில் முழு அளவிலான துணை பாத்திரத்தில் தோன்றியபின், அபிநயஸ்ரீ இனி படங்களில் கவர்ச்சி ஆட்டங்களில் ஆடுவதில்லை என முடிவெடுத்தார். ஆனால் முமைத் கான் போன்றவர்கள் இருவகையிலும் படங்களில் வெற்றிகரமாக தோன்றுவதைக் கண்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.[2]

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் / காட்சிகள் ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads