மந்திரி குமாரி

எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மந்திரி குமாரி
Remove ads

மந்திரி குமாரி (Manthiri Kumari) 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது குண்டலகேசியைத் தழுவி மு. கருணாநிதி எழுதிய ஒரு நாடகமாகும். நாடகத்தைப் பார்த்த படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அதைப் படமாக்க விரும்பி, அதற்குத் திரைக்கதை, வசனத்தை மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து தயாரித்தார்.[1] எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் மந்திரி குமாரி, இயக்கம் ...
Remove ads

கதாபாத்திரங்கள்

  • தளபதி வீரமோகனாக - ம. கோ. இராமச்சந்திரன்
  • ராஜகுருவாக நம்பியாா்,
  • கொள்ளையன் பாா்த்திபனாக எஸ்.ஏ.நடராஜன்
  • இளவரசி ஜீவரேகாவாக ஜி.சகுந்தலா
  • மந்திரிகுமாரி அமுதவல்லியாக மாதுரிதேவி

வசனங்கள்

இப்படத்தின் முக்கிய வசனங்கள் சில:

  • ராஜகுரு கொள்ளையனாகிய தமது மகன் பாா்த்திபனிடம் 'கொள்ளையடிப்பது கலையா?' என ஆச்சாியமும் அதிா்ச்சியுமாக கேட்கிறாா். பாா்த்திபன் அதற்கொரு விளக்கம் அளித்து தனது செய்கைகளை நியாயப்படுத்தி விளக்கமளிக்கிறான்.
  • ராஜகுரு: அழகான விளக்கம்! உன் கலை ஆா்வம் உன் தலையை அறுப்பதாயிருந்தால்?

பாா்த்திபன்: என் கலைக்காக தியாகம் செய்தவனாவேன்.

அமுதவல்லி: மரணம்- நான் அணைத்து மகிழ்ந்த பொன்னுடலுக்கா? என் இதயத்திலே இலட்சம் தீபங்களை ஏற்றி வைத்த தங்கள் இன்னுயிருக்கா? முடியாது, முடியவே முடியாது. பாா்த்திபன்: நீ என்ன சாவித்திரியா, சபதம் செய்கிறாய்? இந்தக் காலத்து யமன் இளிச்சவாயனல்ல

Remove ads

கதைச்சுருக்கம்

முல்லை நாட்டின் அரசர் ராஜ குருவின் (எம்.என்.நம்பியார்) சொல்படி நடப்பவர். குருவின் மகன் பார்த்திபன் (எஸ்.ஏ. நடராஜன்) முல்லை நாட்டின் தளபதி ஆக வேண்டும் என்று குரு ஆசைப்பட்டார். மாறாக, வீர மோஹனை தளபதியாக (எம். ஜி. ஆர்) நியமனம் செய்தார் அரசர். அதில் கோபமுற்ற பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை (ஜி. சகுந்தலா) பார்த்திபன் மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோஹனை விரும்பினாள். பார்த்திபன் தன்னை சந்திக்க ஜீவரேகாவிற்கு ரகசிய தூது அனுப்பினான். அந்த தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை (மாதுரி தேவி) சென்றடைந்தது. அவளும் பார்த்திபனை பார்க்கச்செல்ல, இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன் அமுதவல்லியை இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்தினான்.

இந்நிலையில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முல்லை நாட்டு அரசர் வீர மோஹனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். கோபமடைந்த ராஜ குரு தன் மகனை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிக்கிறார். பெண்தெய்வத்தின் முன் வாதிடுகிறார் ராஜகுரு. அப்போது, அச்சிலையின் பின்னால் ஒளிந்திருந்த அமுதவல்லி, பார்த்திபன் நிரபராதி என்று கூறுகிறாள். அது தெய்வத்தின் குரல் என்று நம்பிய அமுதவல்லியின் தந்தை மந்திரி, பார்த்திபன் நிரபராதி என்று அவரும் கூறிவிடுகிறார். ராஜ குருவுடனும், மந்திரியுடனும் அரசர் கலந்து ஆலோசித்து, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோஹனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான். வீர மோஹனுடன் ஜீவரேகாவும் சென்றுவிடுகிறாள்.

பார்த்திபனை திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது வழிப்பறியில் ஈடுபடுகிறான் பார்த்திபன். வீரமோஹனை தாக்கி, ஜீவரேகாவை கடத்திவிடுகிறான் பார்த்திபன். அமுதவல்லி தன் கணவரை மாறுவேடத்தில் பின்தொடர்ந்து சென்று, ஜீவரேகாவை காப்பாற்றுகிறாள். அதனால், அமுதவல்லியை கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான் பார்த்திபன். மாறாக, அமுதவல்லி பார்த்திபனை தள்ளி கொன்று, ஒரு புத்தமத துறவியாகிறாள். ஜீவரேகாவை மாறுவேடத்தில் வீர மோகன் சந்திக்க வருகிறான். அப்போது ராஜகுரு அரசரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது பார்த்துவிடுகிறான். ஆனால், அரசர் வீர மோகன் தான் தன்னை கொல்ல வந்ததாக தவறாக நினைக்கிறார். பின்னர் அந்த சூழ்நிலையிலிருந்து வீர மோகன் எவ்வாறு தப்பித்தான் என்பதே மீதிக் கதையாகும்.

Remove ads

இசை

கா. மு. ஷெரீப் மற்றும் அ. மருதகாசி எழுதிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி பாடிய பாடல் "வாராய் நீ வாராய்" மிகவும் பிரபலமான பாடலாகும். இப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads