மனோன்மணி சண்முகதாசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மனோன்மணி சண்முகதாஸ் (பிறப்பு: அக்டோபர் 14, 1943) ஈழத்தின் கல்வியாளரும், தமிழறிஞரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

மனோன்மணி இலங்கையில் முருகேசன், பாக்கியம் அம்மாள் ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தவர். 1948 முதல் 58 வரை சிவப்பிரகாசர் பள்ளியில் தொடக்க உயர்நிலை வகுப்புகளைப் பயின்றவர். 1959 இல் புகுமுக வகுப்பை மெதடிச நிறுவனத்தில் பயின்றவர். 1961 முதல் 65 வரை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றவர். பின்னர் நூலகவியல் சார்ந்த பட்டயப்படிப்பு நிறைவு செய்தவர்.

முனைவர் பட்டம்

1978-80 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார். முனைவர் க. கைலாசபதியின் மேற்பார்வயில் சி.வை.தாமோதரம்பிள்ளை குறித்த ஆய்வேட்டை இதற்காக வழங்கினார். 1994-97 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்தார். "சங்க இலக்கியத்தில் உரைகளின் பொருத்தப்பாடு - குறுந்தொகை" (Appropriateness of the Commentaries to Cankam literature: A close analysis of Kuruntokai) என்னும் தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது.

Remove ads

ஆசிரியப் பணி

வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் (1965-68) இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய மனோன்மணி 1979-82 வரை தம் கணவர் பேராசிரியர் அ. சண்முகதாசின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார். 1975 முதல் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் வருகை தரு விரிவுரையாளர் பணியாற்றினார்.

சப்பானில் பணி

1983 முதல் 1993 வரை சப்பானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுசுமு ஓனோவின் ஆய்வுப்பணிகளில் இணைந்து ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தமிழ்மொழிக்கும் சப்பான் மொழிக்குமான உறவு பற்றிய அரிய ஆய்வுப்பணியில் ஈடுபட்டு உழைத்தார். அதுபொழுது சப்பானிய இலக்கியம், கவிதைகள் பற்றிய படைப்புகளைத் தமிழில் வழங்கினார். மேலும் முதுகலை பயிலும் சப்பானிய மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றி பாடம் நடத்தும் வாய்ப்புப் பெற்றார். 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு வருகைதரு பேராசிரியர் பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். தொடர்ந்து சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழ் சப்பானிய ஆய்வுகளுக்கும் உதவினார்.

வெளியிட்ட நூல்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய போக்குகள்
  • சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு
  • ஆற்றங்கரையான்
  • தமிமொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை
  • யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்)
  • தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி
  • பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் (இரு தொகுதி)
  • தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல்
  • சப்பானியக் காதல் பாடல்கள்
  • குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு
  • காலம் தந்த கைவிளக்கு,
  • காலத்தை வென்ற பெண்கள்
  • சங்க காலத்திருமண நடைமுறைகள்
  • சி.வை.தாமோதரன் பிள்ளை
  • நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி (2012)
  • இலங்கைத் தமிழியல் - சில பதிவுகள் (2012)

விருதுகள்

கலைஞானச் சுடர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்குக் கிடைத்தன.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads