வட்டுக்கோட்டை
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வட்டுக்கோட்டை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 11 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் பொன்னாலையில் இருந்து கிழக்கு நோக்கித் திரும்பும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி (AB21) ஊடறுத்துச் செல்கின்றது, இதைத்தவிர இவ்வூரை கொக்குவில்-வட்டுக்கோட்டை வீதி வழியாகவும் வந்தடையலாம். இவ்வூரைச்சூழ அராலி, மூளாய், சித்தங்கேணி போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இவ்வூரில் நடைபெற்றது ஒரு சிறப்பம்சம் ஆகும்.[1][2][3]
Remove ads
பெயர்க்காரணம்
வட்டுக்கோட்டை என்ற பெயரானது வட்டக் கோட்டை என்பதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும், மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து (வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை) வந்தது என்றும் வாதிடுகின்றனர்.
பாடசாலைகள்
- வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி - இது வட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசிய பாடசாலை ஆகும். 1894 புரட்டாதி 9ம் திகதி அம்பலவாண நாவலர் ஆல் ஆங்கில பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணக் கல்லூரி - ஒரு தனியார்மய புகழ்பெற்ற கலவன் பாடசாலை ஆகும். 1823இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
- வட்டு மத்திய கல்லூரி
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads