மன்செஸ்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்செஸ்டர் (Manchester) என்பது இங்கிலாந்து, பாரிய மன்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மன்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர்[1].
இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மன்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது[2]. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. 2006 இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மன்செஸ்டர் நகரம் முன்னணி நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும்[4]. 2002 ஆம் ஆண்டில் இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மன்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்தாட்ட அமைப்பு, மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads