மன்னார்க் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னார்க் கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் அமைந்துள்ள மன்னார்த் தீவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். அதன் நீளப்பாட்டு அச்சு, வடமேற்கு - தென்கிழக்காக, கரைக்கு ஏறத்தாழச் செங்குத்தாக இருக்குமாறு மன்னார்த்தீவு பாக்கு நீரிணைக்குள் நீண்டு அமைந்துள்ளது. தீவுக்கும், தலைநிலத்துக்கும் இடையே மிகவும் குறுகலான கடற்பகுதியே உள்ளது. மன்னார்க் கோட்டை, தீவின் தென்கிழக்கு முனையை அண்டித் தலைநிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த்தீவை 1560 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்டனர். போத்துக்கீசர் கைப்பற்றிய யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் நிலப்பகுதி இது. இங்கே அவர்கள் தமது கோட்டை ஒன்றைக் கட்டினர். 1658 ஆன் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுப்பதற்கு முன்னர் மன்னார்த்தீவைக் கைப்பற்றினர்.
அமைப்பு
மன்னார்க் கோட்டை சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads