மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா (Gulf of Mannar Marine National Park) இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையம் உள்ளடக்கிய பகுதியாகும். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துக்குடியில் இருந்து தனுட்கோடி வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்திற்குப் பரந்துள்ளது. பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் இப்பூங்கா இதன் கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். [1]
Remove ads
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads