மம்தா சங்கர்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

மம்தா சங்கர்
Remove ads

மம்தா சங்கர் (Mamata Shankar) (பிறப்பு 7 ஜனவரி 1955) ஒரு இந்திய நடிகையும், நடனக் கலைஞருமாவார். மேற்கு வங்காளத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர், சத்யஜித் ராய், மிருணாள் சென், ரிதுபர்னோ கோஷ், புத்ததேவ் தாஸ்குப்தா, கவுதம் கோஷ் போன்றவர்கள் உட்பட பல இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகையாக இருப்பதைத் தவிர, இவர் ஒரு நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் அறியப்படுகிறார்.[1]

விரைவான உண்மைகள் மம்தா சங்கர், தாய்மொழியில் பெயர் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

உதய் சங்கர் மற்றும் அமலா சங்கர் ஆகிய நடனக் கலைஞர்களுக்கு 1955ஆம் ஆண்டில் மம்தா பிறந்தார்.[2] இவர் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் மருமகள். இவரது சகோதரர் ஆனந்த சங்கர், இந்திய-மேற்கத்திய இசையின் இணைவு இசைக்கலைஞராவார்.

கொல்கத்தாவின் 'உதய் சங்கர் இந்தியா கலாச்சார மைய'த்தில் தனது தாய் அமலா சங்கரிடம் நடனத்தில் பயிற்சி பெற்றார்.[3]

தொழில்

இயக்குநர் மிருணாள் சென்னின் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டில் வெளியான மிருகாயா என்ற படத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார். இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

திருமணத்துக்குப் பின்னர், 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உதயன் - மம்தா சங்கர் நடன நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இது உலகெங்கிலும் பரவலாகப் பயணிக்கிறது. இந்த குழு 1978 இல் நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூரின் சந்தாலிகா என்ற படைப்பை தனது முதல் தயாரிப்பாகக் கொண்டிருந்தது.[4] அதைத் தொடர்ந்து ஹோரிகேலா, ஆஜ்கர் ஏகலபியா, மிலாப், ஷிகார், மதர் எர்த், அமிர்தஸ்யபுத்ரா , சபாரி போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியது.[5][6][7][8]

Remove ads

சொந்த வாழ்க்கை

சந்திரதேவ் கோஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்மூலம் இவர்களுக்கு இரத்துல் சங்கர் மற்றும் இரஜீத் சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

விருதுகள்

  • 1992: தேசியத் திரைப்பட விருது - சிறப்பு நடுவர் விருது (சிறப்புத் திரைப்படம்) : அகந்துக்
  • 1993: "சகா பிரசகா" படத்துக்கான பி.எஃப்.ஜே.ஏ விருது-சிறந்த துணை நடிகை விருது
  • 2000: பி.எஃப்.ஜே.ஏ விருது - "உத்சாப்" படத்திற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads