மயூர்பஞ்சு மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பரிபடா நகரத்தில் அமைந்துள்ளது.[1]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இம்மாவட்டப் பகுதிகள் மயூர்பஞ்ச் சமஸ்தானத்தில் இருந்தது. கரும்புலிகளுக்கு பெயர் பெற்ற சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் இம்மாவட்டத்தில் உள்ளது.[2]

மாவட்ட விவரம்

இம்மாவட்டம் பசுமையான தாவரங்களும், வெவ்வேறு விலங்கினங்களும் தன்னகத்தே கொண்ட வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட, தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சிமிலிபால் உயிர்க்கோளத்தின் தாயகமாகும். இந்த மாவட்டம் வளமான கனிம வளத்தையும் கொண்டுள்ளது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களான, இரும்பு-தாது (ஹெமாடைட்), வனாடிஃபெரஸ் மற்றும் டைட்டானிஃபெரஸ் காந்த, சைனா களிமண், கலேனா (ஈய தாது), கயனைட், அஸ்பெஸ்டாஸ், ஸ்டீடைட் (சோப்பு கல்) மற்றும் குவார்ட்சைட் ஆகியவை, இங்குள்ள நிலப்பகுதிகளில் கிடைக்கின்றன. இவற்றில் கோருமாஹிசானியின் இரும்பு தாது வைப்பு , சுமார் அரை நூற்றாண்டு காலமாக எடுக்கப்பட்ட, படம்பஹார் மற்றும் சுலைபட் ஆகியவை சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவையாகக் கருதப்படுகிறது.

பஞ்சா வம்சத்தின் ஆட்சியாளர்கள், சுமார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இந்த மாநிலத்தை தொடர்ந்து உடையாமல் காத்தனர். ஆரம்ப பஞ்சா ஆட்சியாளர்களின் கீழ், இம்மாநிலத்தின் பெயர் கிஜ்ஜிங்கா மண்டலா எனவும், அப்பொழுது அதன் தலைநகர் கிஜ்ஜிங்கா கோட்டா எனவும் பெயரிடப்பட்டது. அந்த ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட செப்புத் தகடு, கல்வெட்டுகள், கிஜ்ஜிங்கா மண்டலா என்பது, மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களையும், பீகாரில் உள்ள சிங்பூம் மாவட்டத்தின் சில பகுதிகளையும், மேற்கு வங்காளத்தின் மதினாபூர் மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிவான நாடாக இருந்து ஆட்சி செய்யப்பட்டது. முகலாயர் காலத்தில், பஞ்சா ஆட்சியாளர்களின் பிரதேசம் கடல் வரை இருந்தது. இக்காலக்கட்டத்தில், தலைநகரம் கிஜ்ஜிங்கா கோட்டாவிலிருந்து, ஹரிபூருக்கு மாறியது.

மயூர்பஞ்ச் மன்னர்கள் ஆங்கில ஆட்சியின் கீழ், ஒடிசாவின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாக இருந்தனர். உண்மையில் இது, ஆங்கிலேயர் ஆட்சியின் போது, முழு நாட்டிலும் மிகவும் முற்போக்கான மாவட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பஞ்சா மன்னர்கள், கட்டாக்கில் மாநிலத்தின் முதல் மருத்துவக் கல்லூரியை நிறுவினர். இராவன்ஷா கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்காக, அவர்கள் பெரும் தொகையையும், நிலத்தையும் நன்கொடையாக வழங்கினர். புதிய கட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கும், இறுதியாக ஒடிசாவிற்கு ஒரு ரயில் பாதைக்கு பிரித்தானிய அரசை வற்புறுத்துவதற்கும் அவர்கள் காரண கரத்தாவாக விளங்கினர். மயூர்பஞ்ச் மாநிலம் ஜனவரி 1, 1949 அன்று, ஒடிசா மாநிலத்தில் இணைக்கப்பட்டது. அதன் இணைப்பு தேதி முதல், மயூர்பஞ்ச் நிலப்பகுதியானது, ஒடிசா மாவட்டங்களில் ஒன்றாக நிர்வகிக்கப் படுகிறது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பொருளாதாரம், பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தது. வேளாண் காலநிலை மண்டலமும், சாதகமான மண் வகையும், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் விவசாய வளர்ச்சிகளுக்கு, உறுதுணையாக இருக்கின்றன. பயிர் வகைகளில், நெல் முக்கிய சாகுபடி பயிராகும், அதைத் தொடர்ந்து பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும் உள்ளன. உயர் மட்ட நிலங்களில், கரீஃப் நெல்லின் பரப்பளவு குறைந்து காணப்படும். அந்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பிற தானியங்களின் கீழ், அப்பகுதி சுழற்சி முறையில், அவர்கள் நிலத்தில் வேளாண்குடிகள்,பயிர் முறையை பல்வகைப்படுத்துவதால், நிலவளம் அதிகரித்து வருகிறது. மேலும், விவசாயத் துறையில, நில பயன்பாட்டு முறை மிகவும் இன்றியமையாத காரணியாக உள்ளது.

கனிமங்களை அரைத்து பொடியாக்குதல், கற்களை நசுக்குதல், சீனா-களிமண் கழுவுதல், பீங்கான் தொழில்கள்,[3] உரங்கள், பாதுகாப்பு பெட்டிகள், காகித ஆலை, வண்ணப்பூச்சு இரசாயனங்கள், சலவை, சோப்பு, மின் பொருட்கள், உயர் மின்னழுத்தம், முறுக்கவட(cable) உற்பத்தி, அலுமினியம் உள்ளிட்ட சிறிய அளவிலான தொழில்கள் பாத்திரங்கள், குளிர் சேமிப்பு, இயந்திரமயமாக்கப்பட்ட ஹேட்சரி, பொது ஃபேப்ரிகேஷன், தாள்-உலோகம், பாலி-இலை கோப்பைகள் மற்றும் தட்டுகள் தயாரித்தல், சிமென்ட் பொருட்கள், சபாய் பொருட்கள், அரிசி-ஹல்லர், மாவு ஆலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பழுது பார்க்கும் சேவை போன்றவை, மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தொழில்துறை பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன.

Remove ads

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை படசாஹி, பாங்கிரிபோஷி, பேத்னட்டி, மோரடா, ராசகோபிந்துபூர், சமாககுண்டா, சுளியாபாடா, ராய்ரங்குபூர், குசுமி, பஹள்தா, பிஷோய், பிஜாதள், ஜமுதா, திரிங்கி, உதளா, குண்டா, கோபபந்துநகர், கத்பிபதா, கரஞ்சியா, ரருவாண், ஜஷிபூர், சுக்ருளி, தாகுர்முண்டா, சாரஸ்கணா, படம்பஹத், சந்துவா ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜஷிபூர், சாரஸ்கணா, ராய்ரங்குபூர், பாங்கிரிபோஷி, கரஞ்சியா, உதளா, படசாஹி, பாரிபதா, மோரடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் மயூர்பஞ்சு, பாலேஸ்வர், கேந்துஜர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்குள் உள்ளது.[1]

Remove ads

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads