மரியாம் மீர்சாக்கானி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மரியாம் மீர்சாக்கானி (Maryam Mirzakhani, (Persian: مریم میرزاخانی;[5] 3 மே 1977 - 15 ஜூலை 2017 ) ஓர் ஈரானிய கணிதவியலாளர். இவர் செப்டம்பர் 1, 2008 முதல் கலிபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராக இருந்தார்[6][7][8]. இவர் 2014 ஆம் ஆண்டிற்கான ஃபீல்டுசு பதக்கத்தை வென்ற நால்வருள் ஒருவர். இவரே ஃபீல்டுசு பதக்க வரலாற்றில் இப்பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது[9][10][11][12]

விரைவான உண்மைகள் மரியாம் மீர்சாக்கானி, பிறப்பு ...

இவருடைய கணித ஆய்வுகளுள் தைச்சுமில்லர் கொள்கை (Teichmüller theory), அதிபரவளைவு வடிவக்கணிதம், எர்கோடியக் கொள்கை (ergodic theory), நுண்பகுப்பிய இடவியல் துறையில் அடங்கும் சிம்பிளைட்டிய வடிவவியல் (symplectic geometry).[5] போன்றவை அடங்கும்.

மீர்சாக்கானி 1994 ஆம் ஆண்டும் 1995 ஆம் ஆண்டும் நடத்தப்பெற்ற அனைத்துலக கணித ஒலிம்பியாடு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று உலகக் கணித ஆர்வலர்கள் அறிஞர்களை ஈர்த்தார்.[13]

Remove ads

கல்வி

மீர்சாக்கானி ஈரானில் தெகரான் நகரில் உள்ள ஃபார்சானேகன் பள்ளி (Farzanegan School), தனிமிகுதிறன் கொண்டவர்களின் வளர்ச்சிக்காக உள்ள தேசிய நிறுவனத்திலும் (National Organization for Development of Exceptional Talents,NODET) பயின்றார். இவர் இளநிலை அறிவியல் பட்டத்தைக் கணிதத்துறையில் தெகரானில் உள்ள சரீஃபு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Sharif University of Technology) இருந்து பெற்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது ஃபீல்டுசு பதக்க வெற்றியாளரான கர்ட்டிசு மெக்மியுல்லன் (Curtis McMullen) நெறிகாட்டுதலில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு ஆய்வுச் சிறப்பாளராக (research fellow) கிளே கணிதக் கழகத்திலும், பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார்.[14]

Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads