மறுமணம் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

மறுமணம் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

மறுமணம் அல்லது புனர்விவா-சிந்தகீ மிலேகீ தோபாரா அல்லது புனர்விவாகம் (Punar Vivah, இந்தி: पुनर्विवाह-ज़िन्दगी मिलेगी दोबारा, தெலுங்கு: పునర్వివాహం) என்பது சீ தமிழிலும் சீ தொலைக்காட்சியிலும் சீ தெலுங்கிலும் ஒளிபரப்பப்படுகின்ற இந்தியத் தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1] சீ தமிழில் தமிழ் மொழியில் சின்ன மருமகள் என்ற தொலைக்காட்சித் தொடருக்குப் பதிலாக அக்டோபர் 1, 2012இலிருந்து இத்தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றது.[2] சீ தொலைக்காட்சியில் இந்தி மொழியில் பாகோன்வலி-பாண்டே ஆப்பினி தத்தீர் என்ற தொலைக்காட்சித் தொடருக்குப் பதிலாக முதன்முதலாக பெப்ரவரி 20, 2012இல் இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது.[3] சீ தெலுங்கில் தெலுங்கு மொழியில் ஏப்ரல் 30, [[2012]இலிருந்து இத்தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றது.[4] சீ தமிழில் திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை இ. சீ. நே. பிற்பகல் 6:30இலிருந்து 7:00 மணி வரையும் சீ தொலைக்காட்சியில் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை இ. சீ. நே. பிற்பகல் 10.30இலிருந்து 11.00 மணி வரையும் சீ தெலுங்கில் இ. சீ. நே. பிற்பகல் 6:30இலிருந்து 7:00 மணி வரையும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.[5] இப்போது சீ தொலைக்காட்சியில் பவித்திர இரித்தாவுக்கு அடுத்ததாக, இரண்டாவது மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சி புனர்விவாவே ஆகும்.[6] சீ தொலைக்காட்சியில் புனர்விவா ஒளிபரப்பப்படும் அதே நேரத்தில் சோனித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாலாசி தெலிபிலிமிசின் படே அச்சே இலத்தே ஐனிடமிருந்து கடும்போட்டியை எதிர்கொள்கின்றது.[7]

விரைவான உண்மைகள் மறுமணம் पुनर्विवाह-ज़िन्दगी मिलेगी दोबारा, எழுத்து ...
Remove ads

கண்ணோட்டம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்திலுள்ள போப்பால் என்கின்ற இந்திய நகரத்தில் வாழ்கின்ற ஆர்த்தி (கிரத்திக்கா செங்கர்), இராசேசு (குருமீத்து சவுதிரி) ஆகிய இருவரினதும் கதையே மறுமணம் ஆகும். திருமண முறிவு செய்து கொண்ட பெண்ணான ஆர்த்திக்கு அருண் (திவ்யம் தம) என்ற மகன் ஒருவன் உள்ளான். மனைவியை இழந்த இராசேசிற்கு பிரியா, பானு என்று மகள்கள் இருவர் உள்ளனர். ஆர்த்தியினுடைய கணவரான பிரசாந்து (சார்வார் அகூசா/வினீத்து இரெயினா) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஆர்த்தியை விட்டுச் சென்று விட்டார். இராசேசின் மனைவியான அபித்தா (சுவேத்தா முன்சி) மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். ஆர்த்தியின் புகுந்த வீட்டாரும் இராசேசின் குடும்பத்தினரும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். மறுமணத்துக்குப் பின்னரான அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கதை சுற்றி வருகின்றது.

முதலில், ஆர்த்தியும் இராசேசும் அவர்களுடைய குழந்தைகளின் நலனுக்காகப் பெருந்தயக்கத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். காலவோட்டத்தில் ஆர்த்தியும் இராசேசும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஆர்த்தியின் மகனான அருண் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இராசேசின் தந்தையுடன் (தனது மாமனாருடன்) (சேத்தன் பண்டிட்டு) ஆர்த்தி எதிர்த்துக் கதைத்ததையடுத்து, இராசேசின் குடும்பத்தினர் இருவரையும் திருமண முறிவு செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர். பின்னர், இராசேசின் தந்தை ஆர்த்தியை ஏற்றுக் கொள்கின்றார்.

ஆர்த்தி இராசேசின் மகளான பிரியாவின் மனத்தில் இடம் பிடிப்பதற்காகப் பிரியாவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்கின்றார். அப்பிறந்த நாள் விழாவுக்கு பிரியாவின் தாயான அபித்தா வருவார் என உறுதியுமளிக்கின்றார். தானே அபித்தாவைப் போல் மாறிப் பிரியாவின் முன் தோன்றவும் எண்ணுகின்றார்.

Remove ads

நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், கதைமாந்தர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads