மலம்

From Wikipedia, the free encyclopedia

மலம்
Remove ads

மலம் என்பது உடலினால் உள்ளெடுக்கப்படும் உணவானது, சமிபாட்டுத் தொகுதியால் சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குடல் பகுதியினால் உறிஞ்சப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் செரிக்கப்படாத (சமிபாடடையாத) உணவு மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருள் ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, பெருங்குடலில் சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற திண்ம-நீர்ம நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளில் வெளியேற்றப்படும் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.

மலத்தின் துர்நாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் இண்டோல் (indole), இசுக்கட்டோல் (skatole), கந்தகம் கொண்டுள்ள தியோல் (thiol) சேர்மங்கள் மற்றும் கரிமமல்லா வேதிப்பொருளாகிய ஐதரசன்-டை-சல்பைடு (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.

Thumb
மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான ஐதரசன்-டை-சல்பைடு (H2S) மூலக்கூறு.
Remove ads

மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology)

Thumb
யானையின் மலம்

காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். பறவைகளின் மலத்தை எச்சம் குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள விதை முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல் தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.[1]. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், புழு, வண்டு, பூச்சிகள், நுண்ணுயிரிகள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும்.

Thumb
மண்புழுவின் மலம். இது உரமாகப் பயன்படுகின்றது

சில வண்டுகள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.[2]. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. யானைக் கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் குடலுக்குத் தேவையான நுண்ணுயிரிகளைப் பெறுகின்றன.

Remove ads

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads