மலாயா வங்கிக் கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மே பேங்க் கோபுரம் அல்லது மலாயா வங்கிக் கோபுரம் (ஆங்கிலம்: Maybank Tower; மலாய்: Menara Maybank) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள முதன்மையான வானளாவியும்; அடையாள இடமும் ஆகும்.[1][2]
பழைய கோலாலம்பூர் மாநகர மையத்தின் கிழக்கு எல்லையில் புடுராயா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
இந்தக் கட்டிடம் மலாயா வங்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மே பேங்க் நாணயவியல் அருங்காட்சியகமும் இடம் பெற்றுள்ளது.
Remove ads
வரலாறு
அறமன்றக் குன்றில் குடியேற்றக் காலத்து அமர்வு நீதிமன்றங்கள் இருந்த இடத்தில் 1984-இல். மே பேங்க் கோபுரம் கட்டத் தொடங்கப்பட்டது; 1987-இல் கட்டுமானம் நிறைவுற்றது.
1995-இல் பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்படும்வரை, இதுவே கோலாலம்பூரிலும் மலேசியாவிலும் மிக உயரமானக் கட்டிடமாக இருந்தது. இதன் உயரம் பெட்ரோனாஸ் கோபுரங்களின் பாதியாக, 244 m (801 அடி) உள்ளது.
கோலாலம்பூர் மாநகரத்தின் வான் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக இந்தக் கோபுரம் விளங்குகின்றது.
Remove ads
மேற்சான்றுகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads