மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்

From Wikipedia, the free encyclopedia

மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
Remove ads

கூட்டாட்சிப் பகுதி (மலாய்: Wilayah Persekutuan; ஆங்கிலம்: Federal Territories) என்பது மலேசியாவின் கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் பகுதிகளை மலேசியக் கூட்டாட்சி அரசாங்கத்தால் நேரடியாக ஆளப்படும் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பிடுவதாகும்.

விரைவான உண்மைகள் மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி Wilayah PersekutuanFederal Territories联邦直辖区, உள்ளடங்கியவை ...

கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரமாகவும்; புத்ராஜாயா நிர்வாக தலைநகராகும்; லபுவான் கடல் கடந்த பன்னாட்டு நிதி மையமாகவும் செயல்படுகின்றன..கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி; புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதி; ஆகிய இரு கூட்டாட்சிப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் உள்ளன; லபுவான் கூட்டாட்சிப் பகுதி, சபா மாநிலத்தில் உள்ள ஒரு தீவாகும்.

Remove ads

நிர்வாகங்கள்

கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் ஆகிய அந்த மூன்று கூட்டரசுப் பகுதிகளும் மலேசியக் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் (Ministry for the Federal Territories) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளாகும்.[1]

1979-ஆம் ஆண்டில் முதலில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் நிறுவப்பட்டது அந்த அமைச்சு, கோலாலம்பூர்; கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சகம்

1981-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கின் திட்டமிடல் பிரிவாகச் செயல்படுவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது

பின்னர் 2004-ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் ஒரு முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அந்தப் புதிய அமைச்சகம், மூன்று கூட்டரசுப் பகுதிகளான கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.[2]

Remove ads

வரலாறு

கூட்டாட்சி பிரதேசங்கள் முதலில் சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்தன. கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இரண்டும் சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தன, அதே சமயம் லாபுவான் சபாவின் ஒரு பகுதியாக இருந்தது.[3]

தொடக்கக் காலத்தில் கோலாலம்பூர் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. 1948-ஆம் ஆண்டில், மலாயா கூட்டமைப்பின் (Federation of Malaya) தேசியத் தலைநகரமாக மாறியது.

பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமை

1957-ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றது. அதில் இருந்து, கோலாலம்பூர் நகரமும் சிலாங்கூர் மாநிலமும் பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமையில் இருந்தது. 1969-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கோலாலம்பூர் நகரத் தொகுதிககளில் சிலவற்றை பாரிசான் நேசனல் கட்சி இழந்தது.

இருப்பினும் சிலாங்கூர் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதே தேர்தல் கோலாலம்பூரில் பெரும் இனக் கலவரத்தையும் ஏற்படுத்தியது.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads