மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம்
மலேசியாவில் இரப்பர் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (மலாய்: Institut Penyelidikan Getah Malaysia; ஆங்கிலம்: Rubber Research Institute of Malaysia) என்பது மலேசியாவில் இரப்பர் தொழில் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்யும் ஒரு மையமாகும்.
Remove ads
வரலாறு
1925-ஆம் ஆண்டு சூன் மாதம் 29-ஆம் தேதி மலாயாவின் இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தை (Rubber Research Institute of Malaya) உருவாக்கும் மசோதா மலேசிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது.
1926-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் நாள் முனைவர் பிரைசு (Dr G. Bryce) என்பவர் மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1926 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி பெட்டாலிங் தோட்டத்தில் (Petaling Estate) இருந்த இதன் ஆய்வகம் மூடப்பட்டது.
தற்காலிக ஆய்வகம்
1926-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி, இரப்பர் விவசாயிகள் சங்கத்தின் (Rubber Growers' Association) உபகரணங்களையும் தளவாடங்களையும் மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துக் கொண்டது. மேலும் இதே 1926-ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் சிலாங்கூரின் டாமன்சாரா சாலையில் தற்காலிகமாக ஓர் ஆய்வகக் கட்டிடத்தை அமைக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியது.[1]
மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோரிக்கை அரசாங்கத்தல் ஏற்கப்பட்டது. பின்னர் டாமன்சாரா சாலையில் இருந்த ஒரு பழைய கட்டடம் ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
புதிய கட்டிடம்
1936-ஆம் ஆண்டில், அம்பாங் சாலையில் உள்ள ஒரு புதிய கட்டிடத்திற்கு தன் நிறுவனத்தை மாற்ற முடிவு செய்தது. இந்த கட்டிடம் சிலாங்கூர் சுல்தான் சுலைமான் அவர்களால் (Sultan Sulaiman of Selangor) 1936 ஏப்ரல் 22-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் அதன் செயல்பாட்டை 1937 மே 19-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.[2]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads