மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு (மலாய்: Kementerian Perpaduan Negara Malaysia; ஆங்கிலம்: Ministry of National Unity Malaysia) என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும்; நல்லிணக்கம், இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும்; உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும். இந்த அமைச்சு ஓர் அமைச்சர்; மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது.[3]
இந்த அமைச்சு முன்பு மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒற்றுமை இலாகா எனும் பெயரில் (Department of the Prime Minister of Malaysia) இயங்கியது. 1 சூலை 1969-இல் மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறையை (Department of National Unity) நிறுவியதன் மூலம் இந்த அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டது.
Remove ads
வரலாறு
1969 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, மலேசியா அனுபவித்த மே 13 நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பிரதமர் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை முதலில் நிறுவப்பட்டது. 1972-இல், தேசிய ஒற்றுமை அமைச்சு (Ministry of National Unity) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.
தேசிய ஒற்றுமை இலாகா, 1980-ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்தது. 1990 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of National Unity and Community Development) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் புதிய அமைச்சு 2004-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது.
மலேசிய அரசியல் நெருக்கடி 2020
2004-ஆம் ஆண்டு, இந்த அமைச்சு பிரதமர் துறையில் மீண்டும் ஒரு துறையாக (Department) இணைக்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, இந்தத் துறை, மலேசியக் கலாசார அமைச்சில் இணைக்கப்பட்டு; ஒற்றுமை, கலாசாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சாக (Ministry of Unity, Culture, Arts and Heritage) மாறியது.
2009-ஆம் ஆண்டு, மலேசியப் பிரதமர் மாற்றத்திற்குப் பிறகு, ஒற்றுமைத் துறை (Unity Portfolio) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது. மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, இந்த ஒற்றுமைத் துறை மீண்டும் ஒரு முழு அமைச்சாக மாற்றப்பட்டது; அதாவது இப்போதைய மலேசிய ஒற்றுமை அமைச்சு.
Remove ads
வரலாற்றுச் சுருக்கம்
- 1969
- தேசிய ஒற்றுமை துறை (பிரதமர் துறை)
- Department of National Unity (Prime Minister's Department)
- Penubuhan Jabatan Perpaduan Negara (Jabatan Perdana Menteri)
- 1972
- மலேசிய ஒற்றுமை அமைச்சு
- Ministry of National Unity
- Kementerian Perpaduan Negara
- 1980
- அண்டை உறவுகள் மற்றும் தேசிய ஒற்றுமை துறை
- Department of Neighborly Relations and National Unity
- Jabatan Rukun Tetangga dan Perpaduan Negara
- 1983
- தேசிய ஒற்றுமை துறை
- Department of National Unity
- Jabatan Perpaduan Negara
- 1990
- தேசிய ஒற்றுமை துறை
- Department of National Unity
- Jabatan Perpaduan Negara
- 2004
- தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை
- Department of National Unity & National Integration
- Jabatan Perpaduan Negara & Integrasi Nasional
- 2009
- தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை
- Department of National Unity & National Integration
- Jabatan Perpaduan Negara & Integrasi Nasional
- 2020
- தேசிய ஒற்றுமை அமைச்சு
- Ministry of National Unity
- Kementerian Perpaduan Negara
Remove ads
துறைகள்
- தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை
- Department of National Unity and National Integration
- Jabatan Perpaduan Negara & Integrasi Nasional (JPNIN)
- மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா)
- Malaysian Indian Community Transformation Unit
- Unit Transformasi Masyarakat India Malaysia (MITRA)
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads