சரசுவதி கந்தசாமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரசுவதி கந்தசாமி (ஆங்கிலம்: Saraswathy Kandasami; மலாய்: Saraswathy A/P Kandasami; சீனம்: 萨拉斯瓦迪坎达萨米) (பிறப்பு: 24 செப்டம்பர் 1968) என்பவர் 12 திசம்பர் 2023 முதல் துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். இதற்கு முன்னர் திசம்பர் 2022 முதல் திசம்பர் 2023 வரை மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சில் (Ministry of Entrepreneur Development and Cooperative Malaysia) துணை அமைச்சராகப் பதவி வகித்த மலேசிய அரசியல்வாதி ஆவார்.[2]
மலேசிய வரலாற்றில் ஓர் இந்தியப் பெண்மணி, அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், மலேசிய அரசாங்கத்தைத் தற்போது நிர்வகிக்கும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில்; மலேசிய மக்கள் நீதிக் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பொறுப்பிலும் இவர் தான் முதல் இந்தியப் பெண்மணி. அந்த வகையில் மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கிறார்.
2022 திசம்பர் 10-ஆம் தேதி, மலேசிய மாமன்னர் அப்துல்லா அவர்களால், மலேசிய மேலவை உறுப்பினராக (Dewan Negara Senator) நியமிக்கப்பட்டார். அதே நாளில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் (Anwar Ibrahim Cabinet) மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சில் துணை அமைச்சராகவும் பதவியில் அமர்த்தப் பட்டார்.[3]
Remove ads
பொது
மலேசிய மக்கள் நீதிக் கட்சியைச் சேர்ந்த சரசுவதி கந்தசாமி; மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீமின் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) கூட்டணியில் உதவித் தலைவர் பதவி வகிக்கிறார். அன்வர் இப்ராகீம் அமைச்சரவையில் 27 துணை அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். அத்துடன் மலேசிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பெண் என்றும் அறியப்படுகிறது.[4]
2020-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மலேசிய மனிதவள அமைச்சர் மு. சரவணன் அவர்களை எதிர்த்து சரசுவதி கந்தசாமி போட்டியிட்டார்.
தாப்பா நாடாளுமன்றத் தேர்தல் 2022
அந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரசுவதி கந்தசாமிக்கு 13,334 வாக்குகளும்; தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொண்ட மு. சரவணனுக்கு 18,398 வாக்குகளும் கிடைத்தன.[5]
5,064 வாக்குகள் வேறுபாட்டில் சரசுவதி கந்தசாமி தோல்வி கண்டபோதும், மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6]
Remove ads
தேர்தல் முடிவுகள் (2022)
Remove ads
வரலாறு
பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்த சரசுவதி கந்தசாமி பினாங்கு லைட் சாலை பள்ளியில் (Convent Light Street, Penang) தன் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார்.
பின்னர் இங்கிலாந்து இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பன்னாட்டு வர்த்தகச் சட்டத் துறையில் முதுகலை பட்டம் (Master's Degree in law at Universiy Of London) பெற்றார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
பொறுப்புகள்
- வழக்கறிஞர்
- மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் (2022)
- சட்ட ஆலோசகர் தமிழ் மலர் நாளிதழ்
- மலேசிய மனிதவள அமைச்சு; திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (Skills Development Fund Corporation - PTPK) முன்னாள் தலைவர்
- பொதுச் செயலாளர், டாக்டர் அம்பேத்கார் நல வாரியம் (Dr. Ambedkar Welfare Board)
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads