மலேசிய சபா பல்கலைக்கழகம்
மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய சபா பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Malaysia Sabah; ஆங்கிலம்: University of Malaysia Sabah; (UMS) சீனம்: 马来西亚沙巴大学) என்பது மலேசியா, சபா, கோத்தா கினபாலு மாநகரில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். 24 1994 நவம்பர் 24-ஆம் தேதி; பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பல்கலைக்கழகச் சட்டம் 1971-இன் பிரிவு 6 (1)-இன் கீழ், மலேசிய நாட்டின் ஒன்பதாவது பொது பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.[1][2]
இந்தப் பல்கலைக்கழகம் கோத்தா கினபாலுவின் செபாங்கர் விரிகுடாவில் 999 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கினபாலு மலை மற்றும் தென் சீனக் கடலின் பின்னணியில், அமைந்து இருக்கும் இந்தப் பல்கலைக்கழகம், பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவின் மிக அழகான பல்கலைக்கழக வளாகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[3]
Remove ads
பொது
1995-ஆம் ஆண்டில், முதன்முதலில் இந்தப் பல்கலைக்கழகம் சபா, லிக்காஸ் நகரில் உள்ள சபா அறக்கட்டளை சமூகக் கல்லூரி வளாகத்தில் இளங்கலை துறையின் மூலமாகத் தொடங்கப்பட்டது. அப்போது அது ஒரு தற்காலிக இடமாக இருந்தது. 1996-ஆம் ஆண்டில், மெங்கத்தால் டெலிகாம் பயிற்சிக் கல்லூரியில், கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.
1999 சூன் மாதம் தொடங்கி 2000 மே மாதம் வரையில், மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், செபாங்கர் விரிகுடாவில் உள்ள அதன் நிரந்தர வளாகத்திற்கு படிப்படியாக மாற்றப்பட்டன. 1999 சனவரி மாதம், லபுவான் தீவில் அதன் பன்னாட்டு வளாகத்தை நிறுவியது. அதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகம் அதன் கல்வி வரம்பை லபுவான் கூட்டரசு பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தியது.
லபுவான் தீவில் உள்ள அதன் பன்னாட்டு வளாகம் லபுவான் நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 1 சனவரி 1999-இல், 356 மாணவர்களுடன் அந்தப் பன்னாட்டு வளாகம் செயல்படத் தொடங்கியது.[4]
Remove ads
காட்சியகம்
- முதன்மை நுழைவாயில்
- 2020 சிலை
- வேந்தர் மாளிகை
- வேந்தர் மாளிகை 2
- விளையாட்டு வளாகம்
- கடற்கரை
- நூலகம்
- சொற்பொழிவு அரங்கம் 2
- சொற்பொழிவு அரங்கம் 3
- பல்கலைக்கழக பள்ளிவாசல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads