மலேசிய சுகாதார அமைச்சு

மலேசியாவில் அமைச்சகம் From Wikipedia, the free encyclopedia

மலேசிய சுகாதார அமைச்சு
Remove ads

மலேசிய  சுகாதார அமைச்சு (மலாய்: Kementerian Kesihatan Malaysia; ஆங்கிலம்: Ministry of Health Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசியாவில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாங்க அமைச்சு ஆகும்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

இந்த அமைச்சு பொது சுகாதாரம் உட்பட அனைத்து வகை சுகாதாரம் தொடர்பான துறைகளைக் கண்காணிக்கின்றது. அவற்றுள் முக்கியமாக மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கூடங்கள், மருத்துவ ஆராய்ச்சிகள், மருந்துகள், பல் மருத்துவம்,  உணவு சுகாதாரம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இதன் தலைமையகம் புத்ராஜெயாவில் அமைந்துள்ளது.

மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை; 15-ஆவது பொதுதேர்தலுக்கு பின் 2022 டிசம்பர் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மலேசிய சுகாதார அமைச்சராக சலிகா முஸ்தபா (Zaliha Mustafa) என்பவர் நியமிக்கப்பட்டார். மறுநாள் 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, 28 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.[1]

Remove ads

பொது

அதற்கு முன்னர் 14-ஆவது பொதுதேர்தலுக்கு பின் பிரதமர் மகாதிர் முமமதினால் மலேசிய சுகாதார அமைச்சராக டத்தோ டாக்டர் ஜுல்கிப்ளி அகமது என்பவர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டாக்டர் லீ பூண் சாய் என்பவர் துணை சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது 23 பெப்ரவரி 2020-இல் பதவி விலகியதை  தொடர்ந்து, அமைச்சர்களின் பதவிகளும் முடிவுக்கு வந்தன.

1 மார்ச் 2020-இல் நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆதம் பின் பாபா சுகாதார அமைச்சராக நியமிக்கப்படடர். துணை அமைச்சர்களாக டத்தோ டாக்டர் நூர் அசுமி பின் கசாலி மற்றும் டத்தோ  ஆரோன் ஆகோ டாகாங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர

Remove ads

அமைப்பு

  • சுகாதார அமைச்சர்
    • துணை மந்திரி
      • பொது செயலாளர்
        • செயலாளர் நாயகத்தின் அதிகாரத்தின் கீழ்
          • அபிவிருத்தி பிரிவு
          • கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவு
          • சட்ட ஆலோசகர் அலுவலகம்
          • உள்துறை தணிக்கை
          • நிறுவன தகவல்தொடர்பு பிரிவு
          • ஒருங்கிணைந்த பிரிவு
          • பூமிபுத்ரா பொருளாதாரம் பிரிவின் முக்கிய செயல்திறன் காட்டி மற்றும் அதிகாரமளித்தல்
          • கொள்கை கண்காணிப்பு பிரிவு
        • சுகாதார தலைமை இயக்குநர்
          • சுகாதார இயக்குனரின் ஆணையத்தின் கீழ்
            • ஜொகூர் மாநில சுகாதார துறை
            • கெடா மாநில சுகாதாரத் துறை
            • கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை
            • கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறை
            • லபுவான் சுகாதாரத் துறை
            • மலாக்கா மாநில சுகாதாரத் துறை
            • நெகரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை
            • பகாங் மாநில சுகாதார துறை
            • பினாங்கு மாநில சுகாதாரத் துறை
            • பேராக் மாநில சுகாதார துறை
            • பெர்லிஸ் மாநில சுகாதார துறை
            • சபா மாநில சுகாதாரத் துறை
            • சரவாக் மாநில சுகாதாரத் துறை
            • சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை
            • திராங்கானு மாநில சுகாதாரத் துறை
          • துணை தலைமை இயக்குநர் (பொது சுகாதாரம்)
            • குடும்ப சுகாதார அபிவிருத்தி பிரிவு
            • பிணி கட்டுப்பாட்டு பிரிவு
            • சுகாதார கல்வி பிரிவு
            • ஊட்டச்சத்து பிரிவு
            • பொது சுகாதார மேம்பாட்டு பிரிவு
          • துணை தலைமை இயக்குநர் (மருத்துவம்)
            • மருத்துவ மேம்பாட்டு பிரிவு
            • மருத்துவ பயிற்சி பிரிவு
            • இணைந்த சுகாதார அறிவியல் பிரிவு
            • பாரம்பரிய மற்றும் நிரந்தர மருத்துவ பிரிவு
            • செவிலியர் பிரிவு
          • துணை தலைமை இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு)
            • திட்டமிடல் பிரிவு
            • பொறியியல் சேவைகள் பிரிவு
            • தேசிய செயலகத்தின் தேசிய செயலகம்
            • மருத்துவ கதிர்வீச்சு கண்காணிப்பு பிரிவு
          • முதன்மை இயக்குநர் (வாய்வழி உடல்நலம்)
            • வாய்வழி சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு
            • உணவுக்குழாய் பிரிவு
            • வாய் உணவுக்குழாய் உடல்நலம் பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு
            • மலேசிய பல்மருத்துவ சபை
          • முதன்மை இயக்குநர் (மருந்து சேவைகள்)
            • மருந்தக அமலாக்க பிரிவு
            • மருந்தக பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு
            • மருந்தக கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு
            • மருந்தக கழகம் மலேசியா
            • தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்
          • முதன்மை இயக்குநர் (உணவு பாதுகாப்பு மற்றும் தரம்)
            • திட்டமிடல், கொள்கை அபிவிருத்தி மற்றும் கோடக்ஸ் தரநிலைப் பிரிவு
            • தொழில்துறை அபிவிருத்தி பிரிவு
            • உணவு ஆய்வாளர் கவுன்சில்
        • துணை பொதுச்செயலாளர் (மேலாண்மை)
          • மனித வள பிரிவு
          • பயிற்சி முகாமைத்துவம் பிரிவு
          • தகுதி மேம்பாட்டு பிரிவு
          • தகவல் முகாமைத்துவம் பிரிவு
          • மேலாண்மை சேவைகள் பிரிவு
        • துணை பொதுச்செயலாளர் (நிதி)
          • நிதி பிரிவு
          • கொள்முதல் மற்றும் தனியார்மயமாக்கல் பிரிவு
          • கணக்கு பிரிவு
Remove ads

முக்கிய சட்டம்

சுகாதார அமைச்சு பல முக்கிய சட்டங்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பாகும்:[2]

Remove ads

அரசின் கொள்கை முன்னுரிமைகள்

Remove ads

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads