மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Remove ads

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Teknologi Malaysia; ஆங்கிலம்:University of Technology Malaysia என்பது மலேசியா, ஜொகூர், இசுகந்தர் புத்திரி, சுகூடாய் நகரில் உள்ள ஒரு முதன்மையான பொது ஆய்வு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். உலகப் பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலில், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தற்போது உலகில் 188-ஆவது இடத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொறியியல் துறையில் மிகவும் பிரபலமான இந்தப் பல்கலைக்கழகத்தின் பயிற்று மொழி ஆங்கிலம் ஆகும்.

Remove ads

பொது

1975 ஏப்ரல் 1-ஆம் தேதி, இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் தேசிய தொழில்நுட்ப் கல்விக் கழகம் என்பதில் இருந்து மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், மாற்றம் செய்யப்படுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே, 14 மார்ச் 1972 -இல், இந்தப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்று விட்டது.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சுகூடாய் பிரதான வளாகம் 1222 எக்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் கோலாலம்பூரில் உள்ளது. அதன் பரப்பளவு 18 எக்டர். பிரதான சுகூடாய் வளாகத்தில் 13 கல்வித் துறைகள்; 17 குடியிருப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் சுகூடாய் பிரதான வளாகத்தின் பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் குடியிருப்புக் கல்லூரிகளில் தங்கிப் பயில்கின்றனர்.

ஆராய்ச்சி மேலாண்மை மையம்

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மேலாண்மை மையம் 1982-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முன்பு இந்த மேலாண்மை மையம்; 'ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவு' என்றும்; 'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு' என்றும் அழைக்கப்பட்டது. இறுதியாக 1997-ஆம் ஆண்டில் 'ஆராய்ச்சி மேலாண்மை மையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தர வரிசை

உலகப் பல்கலைக்கழகங்களின் வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையின்படி, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நான்காவது இடத்திலும், மலேசியாவில் முதலிடத்திலும் பட்டியலிடப் படுகிறது.[1][3][4]

2016-ஆம் ஆண்டில் உலகப் பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலின், பொறியியல் & தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் பிரிவில், இந்தப் பல்கலைக்கழகம் 100-ஆவது இடத்தைப் பிடித்தது.[1] இருப்பினும், உலகளாவிய பல்கலைக்கழகத் தகுதியை அடைவது; மற்றும் 2020-ஆம் ஆண்டளவில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் 50-ஆவது இடத்திற்குள் தரவரிசைப்படுத்துவது; ஆகியவற்றை மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.[5]

மேலதிகத் தகவல்கள் தரவரிசை ...
Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads