மலேசிய மக்கள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய மக்கள் கட்சி (மலாய்: Parti Rakyat Malaysia, ஆங்கிலம்: Malaysian People's Party) என்பது மலேசியாவில் ஒரு ஜனநாயக, சமதர்ம அரசியல் கட்சியாகும். 1955 நவம்பர் மாதம் 11-ஆம் தேதி பார்த்தி ராக்யாட் (மலாய்:Parti Ra'ayat) எனும் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது.[1]
மலேசியாவில் மிகப் பழமையான அரசியல் கட்சிகளில் இதுவும் ஒரு கட்சியாகக் கருதப்படுகின்றது. இந்தக் கட்சி, இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான மலாய் இளைஞர் அணியின் பரம்பரை வரலாறுகளைக் கொண்ட கட்சியாகும்.
Remove ads
தோற்றம்
மலேசிய மக்கள் கட்சியைத் தோற்றுவித்தவர் அகமட் போஸ்த்தமான் என்பவராகும். மலாய் இளைஞர் அணியின் இயக்கத்தில் மலாய்: Kesatuan Melayu Muda (KMM), அகமட் போஸ்த்தமான் ஒரு செயல் திறனாளராக இருந்தார். மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி செய்த போது, அந்த அணியின் வழியாக உள்ளூராட்சிப் பிரிவுகளில் கூட்டுறவு இயக்கங்களைச் செயல்படுத்தி வந்தார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads