மலேசிய மரபுச்சின்னம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய மரபுச் சின்னம், (மலாய்: Jata Negara Malaysia; ஆங்கிலம்: Coat of arms of Malaysia) என்பது மலேசியாவின் பாரம்பரியச் சின்னமாகும். மத்தியில் ஒரு சின்னம் பொறித்த கேடயம்; இரண்டு புலிகள்; ஒரு பிறை; பதினான்கு முனை கொண்ட நட்சத்திரம்; குறிக்கோளுரை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மரபுச் சின்னம்.
மலேசியாவின் தற்போதைய சின்னம் பிரித்தானியக் குடியேற்றவாத ஆட்சியின் கீழ் இருந்த மலாய் நாடுகளின் கூட்டமைப்பின் மரபுச் சின்னத்தின் வழி வந்தது ஆகையால், தற்போதைய சின்னம் ஐரோப்பிய கட்டிய நடைமுறைகளை ஒத்துள்ளது.
மலேசிய மரபுச் சின்னம், இரண்டு புலிகளால் பாதுகாக்கப்பட்ட கேடயத்தைக் கொண்டுள்ளது. அதன் மேலே 14 புள்ளிகள் கொண்ட "கூட்டரசு நட்சத்திரம்"; மஞ்சள் நிற பிறை கொண்ட ஒரு முகடு; உள்ளன. மேலும் கீழே ஒரு பொன்மொழி பொறிக்கப்பட்டு உள்ளது.
Remove ads
வரலாறு
ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ், கூட்டரசு மலாய் மாநிலங்கள் (Federated Malay States (FMS) உருவானதில் இருந்து, மலேசிய மரபுச் சின்னத்தின் தோற்றம் அறியப்படுகிறது.
1895-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் கொடி அறிமுகமானது. அப்போது அந்தச் சின்னம் மலேசிய மரபுச் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தச் சின்னம் 1895 முதல் 1948 வரையில்; அதாவது மலாயா கூட்டமைப்பு உருவாக்கம் வரை பயன்பாட்டில் இருந்தது.
Remove ads
காட்சியகம்
- 1963 முதல் 1965 வரை பயன்படுத்தப்பட்ட மலேசிய மரபுச் சின்னம்.
- 1965 முதல் 1975 வரை பயன்படுத்தப்பட்ட மலேசிய மரபுச் சின்னம்.
- 1975 முதல் 1988 வரை பயன்படுத்தப்பட்ட மலேசிய மரபுச் சின்னம்.
- மலேசியாவின் மாட்சிமை பொருந்திய யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் அரச மரபுச் சின்னம்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads