மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை (1878 - 1931) தமிழகத்தைச் சேர்ந்த வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.
இளமைக்காலம்
பழைய தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் அருகேயுள்ள அச்சுதமங்கலத்தில் பிறந்தவர் கோவிந்தசாமி பிள்ளை. தனது 12ஆவது வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். இவரின் முதல் ஆசிரியர் கீவளூர் சிதம்பரநாத பிள்ளை என்பவராவார். வயலின் சீர்காழி நாராயணசாமி பிள்ளை, எட்டையபுரம் இராமச்சந்திர பாகவதர், உமையாள்புரம் பஞ்சாபகேச பாகவதர் ஆகியோரிடமும் வயலின் கற்றார்.
இசைப் பணி
சென்னையில் தங்கியிருந்தபோது பட்டினம் சுப்பிரமணிய ஐயர், திருக்கோடிகாவல் கிருஷ்ணய்யர், வீணை தனம்மாள் ஆகியோரிடம் பழகி இசை நுட்பங்களை மேலும் அறிந்துகொண்டார். கோவிந்தசாமி பிள்ளை புல்லாங்குழலும் வாசிப்பார். தனது 22 வயதில் பக்கவாத்தியமாக பிடில் வாசிக்க ஆரம்பித்தார்.
புல்லாங்குழல் சரப சாஸ்திரிகள், இராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பாலக்காடு அனந்தராம பாகவதர், மதுரை புஷ்பவனம் ஐயர், புல்லாங்குழல் பல்லடம் சஞ்சீவ் ராவ், புளூட் கும்பகோணம் நாகராஜராவி, காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.
Remove ads
மாணாக்கர்கள்
- பாப்பா கே. எஸ். வெங்கடராமையா
- நரசிம்மலு
- ரங்கையா
- ராதாகிருஷ்ணன் பிள்ளை
உசாத்துணை
- Veteran lives up to expectations [தொடர்பிழந்த இணைப்பு]
- 'மலைக்கோட்டை மகாமேதை' கட்டுரை, எழுதியவர்:எஸ். வி. நாதன்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2013 - 2014), (பக்க எண்கள்: 40, 41)
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads