பாப்பா கே. எஸ். வெங்கடராமையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா ("Papa" K. S. Venkataramaiah, 12 செப்டம்பர் 1901 – 1972) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சி
இவர் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் கற்றார்.[1]
இசை வாழ்க்கை
இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் [2], செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்[1]:
புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்[1].
பெற்ற விருதுகள்
- சங்கீத கலாநிதி விருது, 1962; வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை.
- சங்கீத நாடக அகாதமி விருது, 1967; வழங்கியது சங்கீத நாடக அகாதமி[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
