மலையக மக்கள் முன்னணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலையக மக்கள் முன்னணி (Up-Country People's Front) இலங்கையில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற்சங்கமுமாகும். இது பொதுவாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் (இதொகா) ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய பெரியசாமி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்.[1] இக்கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையையும் அதன் தலைமையுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டிருந்தது. இதன் தற்போதைய தலைவர் வே. இராதாகிருஷ்ணன் ஆவார்.
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தையும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 1 ஆசனத்தையும் தேசியபட்டியலில் 1 ஆசனத்தையும் வென்றது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads