மலையாளத் திரைப்படத்துறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலையாளத் திரைப்படத்துறை அல்லது மோலிவுட் என்பது தென்னிந்தியாவில் கேரளா மாநிலத்திலிருந்து மலையாள மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். இது இந்தியத் திரைப்படத்துறையில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைக்கு அடுத்தபடியான நான்காவது பெரிய திரைப்படத்துறை ஆகும்.[4] இங்கு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஒளிப்பதிவு மற்றும் கதை சார்ந்த யதார்த்தமான கதைக்களங்களுக்காக அறியப்படுகின்றன. 'மரானா சிம்ஹாசனம்' மற்றும் வானபிரஸ்தம் போன்ற படைப்புகள் 1999 கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.[5][6]
Remove ads
வரலாறு
1947 க்கு முன்னர் இரண்டு ஊமைத் திரைப்படங்களும், மூன்று மலையாள மொழி திரைப்படங்களும் மட்டுமே கேரளத்தில் உருவாக்கபட்டன.[7][8] அதை தொடர்ந்து கேரள மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் 1950 களில் ஆண்டுக்கு 6 ஆக இருந்தது, 1960 களில் ஆண்டுக்கு 30 ஆகவும், 1970 களில் ஆண்டுக்கு 40 ஆகவும், 1980 ல் 127 திரைப்படங்களாகவும் உயர்ந்தது.
மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படம் விகதகுமாரன் என்ற திரைப்படம் ஆகும். இது 1928 ஆம் ஆண்டில் தயாரிப்பு தொடங்கியது, இது அக்டோபர் 23, 1930 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள கேபிடல் திரையிலாயரங்குகளில் வெளியிடப்பட்டது. இது மலையாள சினிமாவின் தந்தை என்ற பெருமையைப் பெற்றது. திரைப்படத்துறையை பற்றி அனுபவம் இல்லாதால் தொழிலதிபர் ஜே. சி. டேனியல் என்பவரால் தயாரித்து இயக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads