மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாகரல் திருமாகரலீஸ்வரர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றின் வடகரையில் திருமாகரல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 16 கி.மீ. இல் இங்கு வரலாம். இக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இதன் உட்பிரகாரம் யானையின் பின்புற அமைப்பில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பதிகம் இயற்றப்பட்டுள்ள ஏழாவது தலம் ஆகும். கோவில் நகரம் காஞ்சியில் அமைந்துள்ள அழகிய கோவில்.
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிவ தலங்களிலேயே மிகவும் சிறப்பாக இங்கு உடும்பின் வால் வடிவில் சுவாமி அமைந்துள்ளார். இங்கு அர்த்தநாரியாக பைரவ சுவாமி உள்ளார். வெள்ளை யானை மீது அமர்ந்த கோலத்தில் முருகன். இராஜகோபுரத்தில் கோவில் வரலாறு அற்புத சிற்பங்களாய் பொறிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் உள்ளன.
Remove ads
கோயில் சிறப்புகள்
- இத்தலத்தின் லிங்கம் சுயம்பு வடிவமானது
- இறைவன் பெயர்கள்
- திருமாகரலீஸ்வரர்
- அகத்தீசுவரர்
- உடும்பீசுவரர்
- புற்றிடங்கொண்டநாதர்
- பாரத்தழும்பர்
- ஆபத்துக்காத்தவர்
- ஆபத்சகாயர்
- பரிந்துகாத்தவர்
- மங்கலங்காத்தவர்
- மகம்வாழ்வித்தநாதர்
- நிலையிட்டநாதர்
- தடுத்தாட்கொண்டவர்
- அம்பிகை பெயர் ஸ்ரீ திருபுவனநாயகி.
- தீர்த்தம் அக்னி.
- தல மரம் எலுமிச்சை.
- தல விநாயகர் ஸ்ரீ பொய்யாமொழிவிநாயகர்.
- தல முருகர் வெள்ளை யானை மீது அமர்ந்த கோலத்தில் கஜாரூடமுருகர் அமைந்துள்ளார்.
- திருப்பதிகம் திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது. இதை ஓதும் அன்பர்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும், மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads