மாக புராணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாக புராணம் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீர ராம பாண்டியன் என்பவரால் பாடப்பட்ட நூல். மாசி மாதத்தில் நீராடுவதை 'மாகஸ்நானம்' என்று கொண்டாடுவது வழக்கம். இந்த நீராட்டு விழாப் பற்றிய கதைகளைக் கூறுவது மாக புராணம். இது வடமொழிப் 'பாத்ம புராணம்' [2] புராணமஎன்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளதாம். அந்த நூலிலிருந்து இந்தத் தமிழ்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இதில் 12 கடவுள் வாழ்த்துப் பாடல்களும், 1412 புராணச் செய்திப் பாடல்களும் உள்ளன. [3] மாசி மாதம் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து காவிரி போன்ற புதுப்புனலில் நீராடும்போது இந்த நூல் ஓதப்பட்டதாகத் தெரிகிறது. கலித்துறைப் பாடல்கள், துதிப் பாடல்கள், சந்தப் பாடல்கள், உலக நீதிகள், வருணனைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
Remove ads
பாடல் - எடுத்துக்காட்டு [4]
- ஊனம் இல்லாக் கல் கோடு உரிய புதல்வர் நல்க மதி
- ஈனம் இல்லாப் பெருஞ்செல்வம் எல்லாம் எளிதில் தர வேண்டி
- ஆன குடகில் பிறந்தாயே, அரங்கற்கு இயல்பாம் ஆரணங்கே
- கான மலர் சேர் காவிலியே, கையால் தொழுவோம் கண்டாயே. [5]
- கால காலனைக் கயிலை யாளியை
- பால லோசனப் பரம தாணுவைச்
- சூல பாணியைத் தொழுத அன்பன்மேல்
- ஏல வந்த கூற்று ஏது செய்யுமே [6]
- குருவம் மா மருது புன்னை கோங்கு வேல் கடம்பு வள்ளி
- மரவம் கூவிளம் இரத்தி வெள்ளிவால் மாதுளங்கம்
- அரசு பாதிரி செருந்தி அங்கோலம் மகருகந்தம்
- சுரபுன்னை குடசம் வேங்கை மராமரம் சூரை காரை [7]
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads