மாங்குளம் கல்வெட்டுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.



இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர் இது பற்றிய விரிவான விளக்கங்களுடன் 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டின் மூன்றாவது அமர்வில் "பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுக்களும்" என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தார்.
Remove ads
கல்வெட்டுச் செய்திகள்
பெரும்பாலும் இக் கல்வெட்டுச் செய்திகள் அனைத்துமே பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன[1].
- கல்வெட்டு 1
- நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை) அமைத்துக் கொடுத்துள்ளார்.
- கல்வெட்டு 2
- நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.
- கல்வெட்டு 3
- வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்னும் ஒரு முத்து வணிகன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது.
- கல்வெட்டு 4
- நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.
- கல்வெட்டு 5
- சந்திரிதன் கொடுபித்தோன்.
- கல்வெட்டு 6
- இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads