மாசாணியம்மன் கோயில்

இது தமிழகத்தில் கொங்கு நாட்டில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் புகழ்பெற்ற இந்து சமய திருக் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாசாணியம்மன் கோயில் (ஆங்கிலம்: 'Masani Amman) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலாகும். இந்த அம்மன் "மாசாணி தேவி" என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில் இந்தியாவிலுள்ள ஆனைமலை, பொள்ளாச்சியில் உள்ளது. [1][2]

பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. தொலைவில், மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இக் கோயிலின் பின்புலமாக ஆனைமலைக் குன்றின் பசுமையினைக் காணலாம்.

இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக் கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.[3][4]

Remove ads

அமைப்பு

இக்கோயிலின் ராஜகோபுரம் வடக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. கருவறையின் கிழக்குப் பக்கத்தில் அம்மன் சுயம்புவாக உள்ளார். பேச்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் உள்ளார்.[5] கோயில் வளாகத்தில்துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.[6]

மூலவர்

இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக் கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது..[3][4]

தெற்கே தலைவைத்துப் படுத்திருக்கும் அவருடைய திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் ஆகியவை காணப்படுகின்றன. தலையில் ஜுவாலா மகுடத்துடன் மேலே நோக்கியபடி காணப்படுகிறார்.[5]

Remove ads

வரலாறு

பண்டைய காலங்களில், ஆனைமலை நன்னூர் என்றும், இப்பகுதி நன்னூரால் ஆளப்பட்டது. தனக்குச் சொந்தமான அடர்த்தியான மாந்தோப்பில் இருந்து பழங்களை பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்திருந்தார். அவரது படை தளபதியின் பெயர் கோசர். கோசர்க்கு சயணி என்ற ஒரு பெண் இருந்தாள். சயணி மிகுந்த அழகு உடையவள். எனவே தனது மகளுக்கு வீரமான ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டார். மகிழன் என்பவரை தனது மகளுக்கு மணமகனாக தேர்வு செய்தார். மகிழனுக்கும் சயணிக்கும் திருமணம் நடந்தது. இருவரின் வாழ்க்கையும் சிறப்பாக சென்றது. திருமணம் முடிந்து முதல் மாதத்திலேயே சயணி கர்ப்பம் ஆனாள். கோசர் தனது மகளின் வளைகாப்பு வைபவத்தை வெகு விமர்சையாக நடத்தினார். பின் எட்டாவது மாதத்தில் தனது மகளை தன் வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்பினார். ஆனால் மகிழனுக்கு தனது மனைவியை பிரிய மனமில்லை. அதை அறிந்து கொண்ட கோசர், குழந்தை பிறந்த சில மாதங்களில் சயணியை திரும்ப அனுப்பி வைப்பதாக மகிழனுக்கு வாக்களித்தார். சயணிக்கு மாம்பழம் மீது அதிக ஆசை. எனவே கோசர் விதவிதமான மாம்பழங்களை வாங்கி கொடுத்தார். ஒரு நாள், சயணியின் தோழிகள் சயணியை சந்திக்க அவளது வீட்டுக்கு வந்தனர். தோழிகளை பார்த்த சயணிக்கு, சிறு வயதில் ஏரியில் குளித்த நியாபகம் வந்தது. எனவே தோழிகளிடம் ஏரியில் குளிக்க தனக்கு ஆசை என கூறினாள். பெண்ணின் ஆசையை அறிந்த கோசர் பத்திரமாக சென்று வரும்படி சயணி மற்றும் தோழிகளிடம் கூறினார். அப்படி ஏரிக்கரைக்கு சென்று குளித்து கொண்டிருக்கையில், ஒரு மாம்பழம் தண்ணிரில் மிதந்து வந்தது. அதை எடுத்த சயணி, அப்படியே சாப்பிட ஆரம்பித்தாள். அது நன்னூர் ராஜா தோட்டத்து மாம்பழம் என்பதை அறிந்த காவலாளி மன்னனிடம் முறையிட மன்னன் சயணிக்கு மரண தண்டனை வழங்கினான். இதை அறிந்த சயணியின் கணவனான மகிழன், தனது மனைவியை விடுவிக்குமாறு மன்னனிடம் வேண்டினான். மகிழன் தனது மனைவிக்கு பதிலாக எடைக்கு எடை தங்கமும், பல யானைகளையும் பரிசாக தருவதாக கூறியும் மன்னன் அதை ஏற்காமல் சயணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டான். பின்னர் மகிழன் , மன்னனை கொன்று தானும் உயிர் துறந்தான். அதை அறிந்த கோசர், ஒரு ஈட்டியை தனது மார்பில் குத்திக் கொண்டு இறந்தார். இது நடந்த சில காலம், ஊரில் மழை இல்லாமல் மக்கள் அவதி உற்றனர். கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை தந்ததால் தான் ஊரில் மழை இல்லாததை உணர்ந்த மக்கள், அந்த பெண்ணிற்கு மண்ணில் சிலை எடுத்து பெண் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். வழிபட ஆரம்பித்தவுடன் மழை பெய்து, ஊரின் செழுமை பழைய நிலைக்கு திரும்பியது. அந்த தெய்வமே பின்னர் மாசாணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். பிள்ளை பேறு இல்லாதவர்கள் மாசாணி அம்மனை வேண்டினாள், பிள்ளை பேறு சீக்கிரம் கிடைக்கும். அது போல மிளகாய் அரைத்து அம்மன் மீது பூசி வேண்டினால், நினைத்த காரியம் வெற்றி அடையும்↵[7]

Remove ads

விழாக்கள்

இக்கோயிலில் மிகச்சிறப்பு பெற்ற விழாவாக பூக்குண்டம் இறங்கும் விழா எனப்படும் தீமிதித்திருவிழா நடைபெறுகிறது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads