ஆனைமலை

From Wikipedia, the free encyclopedia

ஆனைமலைmap
Remove ads

ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள மாசாணியம்மன் கோயில் கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, கோயம்புத்தூருலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பொள்ளாச்சி 14 கி.மீ., உடுமலைப்பேட்டை 30 கி.மீ. தொலைவில் உள்ளன. [4]

பேரூராட்சியின் அமைப்பு

10.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 114 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,933 வீடுகளும், 17,208 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.58°N 76.93°E / 10.58; 76.93 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258 மீட்டர் (846 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தொல்லியல்

ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாட்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிகத் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். [9]

மற்ற விவரங்கள்

  • டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும், ஆழியார் ஆணை, கவியருவி / குரங்கு நீர்வீழ்ச்சி, பட்டாம்பூச்சி பூங்கா, அறிவுத்துருக்கோவில்,வால்பாறை, சினிமா படப்பிடிப்பு தளங்கள் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads