மாடக்கோயில்
தமிழ் நாட்டில் உள்ள ஒரு கோயில் அமைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாடக்கோயில் என்பது மாடி போன்ற அமைப்புடைய கோவிலாகும். இதற்கு பெருங்கோயில் என்ற பெயரும் உண்டு. இவ்வமைப்பில் உள்ள கோயில் கருவறையில் ஒன்றின் மீது ஒன்றாக நிலைகளாக கருவறைகள் அமைந்திருக்கின்றன. கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே இவ்வகையான மாடக்கோயில்கள் இருந்துள்ளன. மாடக்கோயில்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலேயே காணப்படுகின்றன.[1]

Remove ads
வரலாறு
தற்போது காணப்படும் மாடக் கோயில்கள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்திற்கு பிற்பட்டவை. என்றாலும் சங்க காலத்திலே மாடக் கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தன. கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த சோழன் கோச்செங்கணான் சிவபெருமானுக்கு 70 மாடக் கோயில்கள் அமைத்ததாக திருமங்கையாழ்வார் தன் திருநறையூர் பாசுரத்தில் "எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக் குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்" என்று குறிப்பிட்டுள்ளார். கோச்செங்கண்ணன் கட்டியதாக கூறப்படும் 70 கோயிகளில் தற்போது 37 கோயில்கள் எஞ்சியள்ளதாக இரா. கலைக்கோவன் குறிப்பிடுகிறார்.[1] கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனார் அவர் காலத்தில் எழுபத்தெட்டு மாடக் கோயில்கள் இருந்ததை அடைவு திருத்தண்டகத்தில் பாடியுள்ளார்.[2]
Remove ads
வகைகள்
மாடக் கோயில்கள், அதன் நிலைகளின் எண்ணிக்கு தக்கவாறு பெயரிப்பட்டுள்ளன.
- ஒன்பது நிலை மாடக் கோயில்கள்
- ஐந்து நிலை மாடக் கோயில்கள்
- மூன்று நிலை மாடக் கோயில்கள்
- இரண்டு நிலை மாடக் கோயில்கள்
இவற்றில் முன்று மற்றும் இரண்டு நிலை மாடக் கோயில்களே தற்போது வழிபாட்டில் உள்ளன.
கோயில் அமைப்பு
இரண்டு நிலை மாடக் கோயிலின் அமைப்பானது கீழ்கண்ட எட்டு உறுப்புகள் கொண்டதாக அமைகிறது.
- தரை
- சுவர்
- தளவரிசை
- சுவர்
- தளவரிசை
- கழுத்து
- கூரை
- கலசம்
மூன்று நிலை மாடக்கோயில்களின் கீழ்கண்ட பத்து உறுப்புகளை கொண்டதாக அமைகிறது.
- தரை
- சுவர்
- தளவரிசை
- சுவர்
- தளவரிசை
- சுவர்
- தளவரிசை
- கழுத்து
- கூரை
- கலசம்
மாடக் கோவில்கள்
- அட்ட லட்சுமிக் கோவில் - பெசன்ட் நகர், சென்னை
- வைகுண்டப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
- அர்ஜூனன் ரதம், மாமல்லபுரம்
- வீரட்டேசுவரர் கோயில், திருத்தணி
- சட்டைநாதசுவாமி கோயில்
கருவி நூல்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி
ஆதாரங்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads